முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”நீங்க ரெண்டு பேரும் ஒரே இடத்துல இருந்தா செட் ஆகாது”..!! மீண்டும் ஆளுநர் ஆகிறார் தமிழிசை..? பாஜக மேலிடம் போட்ட பிளான்..!!

The post of several state governors appointed 5 years ago will fall vacant next month. Therefore, there are reports that Tamilisai may be made the governor of some state again.
10:03 AM Jun 28, 2024 IST | Chella
Advertisement

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பல மாநில ஆளுநர் பதவி அடுத்த மாதம் காலியாகவுள்ளது. எனவே, ஏதாவது ஒரு மாநிலத்திற்கு தமிழிசை மீண்டும் ஆளுநர் ஆக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

Advertisement

தமிழ்நாட்டில் திமுக - அதிமுகவுக்கு மாற்று நாங்கள் என பாஜக கூறி வருகிறது. இதற்கு ஏற்றார் போல போராட்டம், ஆர்ப்பாட்டம் என அதிமுகவை பின்னுக்கு தள்ளி பாஜக முன்னிலை வகித்தது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலை எதிர்கொண்ட பாஜக முக்கிய தலைவர்களை தேர்தலில் களம் இறங்கிய. குறிப்பாக இரண்டு மாநில ஆளுநராக இருந்த தமிழிசை, எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், மாநிலங்களவை உறுப்பினர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அண்ணாமலை உள்ளிட்டவர்களை களம் இறக்கியது. ஆனால், தேர்தலில் போட்டியிட்ட 40 இடங்களில் தோல்வி அடைந்தது.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் அரசியல் களத்திற்கு வந்த தமிழிசைக்கும் - அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. யாருக்கு தமிழக பாஜகவில் அதிகாரம் என்ற போட்டி நிலவியது. தொலைக்காட்சிக்கு ஒன்றுக்கு பேட்டியளித்த தமிழிசை தமிழக பாஜகவில் ரவுடிகள் அதிகளவு சேர்க்கப்பட்டதாக விமர்சித்தார். இதனால் இரு தரப்பு ஆதரவாளர்களும் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்டனர். தனக்கு எதிரான கருத்தால் அதிருப்தி அடைந்த அண்ணாமலை, பாஜக தலைவர்களின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு தடை விதித்தார். இது தமிழிசைக்கு வைக்கப்பட்ட செக் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல ஆந்திர மாநில முதல்வர் பதவியேற்பு விழாவில் தமிழிசையை மேடையிலேயே அமித்ஷா கண்டித்தார். இதனால் பாஜக மேலிடம் அண்ணாமலைக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்டது. இந்த நிகழ்வுக்கு பிறகு தமிழிசை செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் திடீர் அழைப்பின் காரணமாக தமிழிசை டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மேடையில் எல்லோருக்கும் முன் பேசியதற்கு அமித்ஷா வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த ஆலோசனையின் போது தமிழ்நாட்டில் பாஜகவின் நிலை, வளர்ச்சி மற்றும் உட்கட்சி மோதல் தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் இரண்டு தலைமை ஒரே இடத்தில் இருப்பதால் அதிகார மோதல் வரும் என்பதை உணர்ந்த பாஜக தலைமை, தமிழிசைக்கு வேறு பொறுப்பு கொடுத்து அதாவது ஆளுநர் அல்லது மத்திய அரசில் முக்கிய பொறுப்பு வழங்கி அரசியலில் இருந்து விலக்கி வைக்கலாம் என முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது. எனவே, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்ட பல மாநில ஆளுநர் பதவி அடுத்த மாதம் காலியாகவுள்ளது. எனவே, ஏதாவது ஒரு மாநிலத்திற்கு தமிழிசை மீண்டும் ஆளுநர் ஆக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளன.

Read More : இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய ராணுவ வீரர்..!! கடைசியில் இப்படி சொல்லிட்டாரே..!! அடிதடியில் இறங்கிய பெண் வீட்டார்..!!

Tags :
அண்ணாமலைதமிழிசை
Advertisement
Next Article