For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், குடியரசு தின விழா இருக்காது': உத்தவ் தாக்கரே.!

05:42 PM Feb 04, 2024 IST | 1newsnationuser7
 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால்  குடியரசு தின விழா இருக்காது   உத்தவ் தாக்கரே
Advertisement

வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் அடுத்த வருடம் நமக்கு குடியரசு தின விழாவே இருக்காது என சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக தெரிவித்துள்ளார். சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள சாவந்த்வாடியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய அவர் பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா குடியரசு நாடாக இருக்காது என தெரிவித்துள்ளார்.

Advertisement

நாட்டிற்கு அறுதிப்பெரும்பான்மை கொண்ட அரசாங்கம் தேவையில்லை. மாறாக இந்தியா கூட்டணி போன்று பல்வேறு கட்சிகளை உள்ளடக்கிய ஒரு அரசு தான் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை அரவணைத்து அழைத்துச் செல்லும் என தெரிவித்துள்ளார். எந்தவிதமான தனிநபரையும் குறிப்பிட்டு குற்றம் சொல்லவில்லை எனக் கூறிய தாக்கரே ஒட்டுமொத்தமான அநீதி மற்றும் பொய்களுக்கு எதிராக பேசுவதாக தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை பிரதமர் மோடி மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வருகை தரும் போது இங்கிருந்து ஏதாவது ஒன்றை குஜராத்திற்கு எடுத்துச் செல்வதாக குற்றம் சாட்டியிருக்கிறார் தாக்கரே. மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல்வராக இருந்தபோது தாக்கரேவால் அறிமுகப்படுத்தப்பட்ட நீர் மூழ்கி கப்பல் சுற்றுலா திட்டத்தை பிரதமர் மோடி குஜராத்திற்கு எடுத்துச் சென்றதாக குற்றம் சாட்டியிருக்கிறார். எங்கள் மாநிலத்திலிருந்து எதையாவது ஒன்றை தனது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்லும் மோடி மகாராஷ்டிரா இரண்டு முறை புயலால் பாதிக்கப்பட்ட போது எந்த உதவியும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார் தாக்கரே. இது போன்ற ஒரு பிரதமர் நமக்கு தேவையா.? என பொதுமக்களிடம் கேள்வி எழுப்பி இருக்கிறார் உத்தவ் தாக்கரே .

மேலும் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் கட்சியில் நிகழும் போட்டி மோதல் பற்றிய எச்சரித்த தாக்கரே மகாராஷ்டிரா மாநிலத்தில் பிஜேபி வலுவிழந்து வருவதாகவும் தெரிவித்திருக்கிறார். சமீபத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றியும் கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது மகாராஷ்டிராவில் நடந்து வரும் பாரதிய ஜனதா சிவ சேனா கூட்டணி ஆட்சி ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என குற்றம் சாட்டியிருக்கிறார்.

Tags :
Advertisement