For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

"BJP மேட்ச் பிக்சிங் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்படும்"… ராகுல் காந்தி எச்சரிக்கை.!!

05:43 PM Mar 31, 2024 IST | Mohisha
 bjp மேட்ச் பிக்சிங் வெற்றி பெற்றால் அரசியலமைப்பு சட்டம் அழிக்கப்படும் … ராகுல் காந்தி எச்சரிக்கை
Advertisement

BJP: தேர்தலில் மேட்ச் பிக்சிங் செய்து பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசியலமைப்பு சட்டம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி(RAHUL GANDHI) எச்சரித்து இருக்கிறார்.

Advertisement

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதை கண்டித்த இந்திய கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய ராகுல் காந்தி(RAHUL GANDHI) இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரர்களின் உதவியுடன் தேர்தல் மேட்ச் பிக்சிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின்(BJP) மீது ராகுல் காந்தி மிகக் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் பிரதமர் மோடி தேர்தல் மேட்ச் பிக்சிங் நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிவித்தார். மேலும் 400 தொகுதிகளுக்கு மேல் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வெற்றியை உறுதி செய்ய மோடி அம்பையர்களை நியமித்திருப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார்.

பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகிய இரு முக்கிய எதிர்க்கட்சி பிரமுகர்கள் அமலாக்கத் துறையினரால் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு இருப்பதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சியினரை பல வழிகளிலும் முடக்குவதற்கு பாசிச பாஜக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் ஆகியோருடன் சோனியா காந்தி ஒற்றுமையின் அடையாள சைகையை வழங்கினார். எதிர்க்கட்சிகளின் இந்த ஒன்று கூடல் அவர்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகளை மறந்து அடக்குமுறை கைதிகளுக்கு எதிராக அரசியல் உந்துதலை காட்டுகிறது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வர இருக்கின்ற பொதுத் தேர்தல் ஆனது வாக்குகளுக்கான போராட்டமாக மட்டுமல்லாமல் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சாசனத்தை காப்பாற்றுவதற்கும் அடிப்படை போராட்டம் இந்த தேர்தல் தான் என ராகுல் காந்தி தெரிவித்தார். பொதுமக்கள் நியாயமான முறையில் வாக்களிக்க தவறினால் ஜனநாயகத்தை யாரும் காப்பாற்ற முடியாது எனவும் கூறினார்.

தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு எதிர்க்கட்சிகளின் குரல்வலையை நசுக்குவதாக கண்டனம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவதும் எதிர்க்கட்சியின் பொருளாதாரத்தை முடக்குவது போன்ற சமூக விரோத செயல்களில் பாஜக அரசிய ஈடுபடுவதை கடுமையாக குற்றம் சாட்டினார். எதிர்க்கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அரவிந்த் கெஜ்ரிவால் கைதை கண்டித்து நடத்தப்பட்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இந்தியா கூட்டணி இடையே ஒற்றுமையை ஏற்படுத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது.

Read More: PM MODI | “ஊழல்வாதிகள் சிறைக்கம்பிகளுக்கு பின்னால் உள்ளனர்”… கெஜ்ரிவால் விவகாரத்தில் பிரதமர் மோடி பதிலடி.!!

Advertisement