For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”..!! புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்..!!

05:13 PM Apr 10, 2024 IST | Chella
”பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் இனி தேர்தலே இருக்காது”     புயலை கிளப்பிய நிர்மலா சீதாராமனின் கணவர்
Advertisement

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் பரப்புரையில் ஒவ்வொரு கட்சியும் மாறிமாறி எதிர்தரப்பு குறித்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், "மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடக்காது" என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர், கருத்து தெரிவித்திருப்பது நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கிறது.

Advertisement

அவர் அளித்துள்ள பேட்டியில், ”வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தலே நடைபெறாது. மேலும், பாஜக ஆட்சியில் அமர்ந்தால் இந்தியாவின் வரைபடம் மாறும். மணிப்பூர், லடாக் பிரச்சனைபோல நாடெங்கும் நடைபெறும். இந்தியா தேர்தலையே மறந்துவிட வேண்டியதுதான். 'இனி பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்' என்பது போன்ற வெறுப்புப் பேச்சுகளை மோடியே செங்கோட்டையில் இருந்து பேசுவார்.

பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்களுக்கு இடையிலான மோதல்களால் மணிப்பூரில் ஏற்பட்ட அமைதியின்மை இந்தியா முழுவதும் வழக்கமானதாக மாறிவிடும்" என அதில் தெரிவித்துள்ளார். மத்திய பாஜக அரசில் அங்கம் வகிக்கும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர், இப்படி பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.

Read More : கால்களில் கூச்ச உணர்வா..? கடுமையான வலியா..? கல்லீரலுக்கு ஆபத்து..!! உடனே மருத்துவரை பாருங்க..!!

Advertisement