தாக்கினால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம்!. வடகொரிய அதிபர் பகிரங்க எச்சரிக்கை!
Kim Jong Un: வடகொரிய தலைநகர் பியோங்யாங் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினால், தனது படைகள் அணு ஆயுதங்களை “தயக்கமின்றி” பயன்படுத்தும் என்று தென் கொரியா மற்றும் அமெரிக்காவிற்கு அதிபர் கிம் ஜாங் உன் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடகொரிய தலைநகர் பியோங்யாங்கின் மேற்கில் உள்ள சிறப்புப் படைகளின் இராணுவப் பயிற்சித் தளத்தை அதிபர் கிம் ஜாங் உன் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், வடகொரியாவின் இறையாண்மையை அத்துமீறி ஆயுதப் படைகளைப் பயன்படுத்த எதிரிகள் முயன்றால், தன்னிடம் உள்ள அணு ஆயுதங்கள் உட்பட அனைத்துத் தாக்குதல் சக்திகளையும் தயக்கமின்றி வடகொரியா பயன்படுத்தும் என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அந்நாட்டு KCNA-சேனல் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக இந்த வார தொடக்கத்தில் தென் கொரியா இராணுவ அணிவகுப்பை நடத்தியது. அப்போது, வட கொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த முயற்சித்தால், அது எங்கள் இராணுவம் மற்றும் அமெரிக்கா மற்றும் கொரியா குடியரசு கூட்டணியின் உறுதியான மற்றும் பெரும் பதிலை எதிர்கொள்ளும்” என்றும் அந்த நாள் வட கொரிய ஆட்சியின் முடிவாக இருக்கும்” என்று தென்கொரிய அதிபர் யூன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: தீவிர எச்சரிக்கை!. இளைஞர்களிடையே அதிகரிக்கும் பெருங்குடல் புற்றுநோய்!. அறிகுறிகள் இதோ!.