முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’எனக்கோ எனது குடும்பத்தினருக்கே ஏதேனும் நடந்தால் முதல்வரும், காவல்துறையுமே பொறுப்பு’..!! பகீர் கிளப்பிய அமர் பிரசாத் ரெட்டி..!!

04:54 PM Mar 23, 2024 IST | 1newsnationuser6
Advertisement

எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு முதல்வர் ஸ்டாலினே பொறுப்பு என பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

பாஜக விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் மாநில தலைவராகச் செயல்பட்டு வருகிறார் அமர் பிரசாத் ரெட்டி. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படுகிறார். பாஜக மேலிடத்துடனும் நெருக்கமான தொடர்பு உள்ளவர். பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர் இந்த அமர் பிரசாத்.

இந்நிலையில், லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவில் அமர் பிரசாத் ரெட்டிக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட அமர் பிரசாத் ரெட்டிக்கு சீட் வழங்கப்படாத நிலையில், தமிழ்நாடு முழுவதும் அண்ணாமலையின் பரப்புரை பயணத்திற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அமர் பிரசாத் ரெட்டி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பியுள்ளார். அவரது பதிவில், "தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான PFIல் இருந்து எனது குடும்பம் மற்றும் எனது பாதுகாப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விண்ணப்பிக்குமாறு, காவல்துறை உளவுத்துறையின் நம்பகமான சோர்ஸ்களில் இருந்து எனக்கு தகவல் கிடைத்தது.

மேலும், பல்வேறு கவலையான சம்பவங்களை எடுத்துரைத்து டிஜிபி மற்றும் கமிஷனருக்கு கடிதம் அனுப்பவும் எனது அம்மா முயற்சி எடுத்துள்ளார். கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர், கமிஷனரிடம், தன் பணியை காப்பாற்றும் நோக்கில், பொய்யான அறிக்கை அளித்துள்ளார். எனக்கோ அல்லது எனது குடும்பத்தினருக்கோ ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக காவல்துறையினர் தான் பொறுப்பு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் பதிவிட்டுள்ளார்.

Read More : IPL பார்க்க செல்பவர்கள் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாமா..? தமிழ்நாடு அரசு பரபரப்பு விளக்கம்..!!

Advertisement
Next Article