தமிழரின் அடையாளம்!! வாழை இலையில் இவ்வளவு நன்மைகளா?
வாழை இலை தமிழரின் அடையாளம் என்பதோடு மட்டுமல்லாமல் நம் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளையும் அளிக்கிறது.
வாழை இலைகளின் பங்கு கிராமங்களில் திகமாக இருந்தாலும், நகர்புறங்களில் வெறும் விசேஷ நாட்களுக்கு மட்டும் பயன்படுத்தக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது. வாழை இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்களும், நன்மைகளும் இருக்கின்றன. அவற்றை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்ளலாம்.
வாழை இலையின் நன்மைகள்:
வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். மேலும் தீக்காயம் ஏற்பட்டவர்களை வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும். அப்பொழுது தான் சூட்டின் தாக்கம் குறையும். வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும். பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும். மேலும் காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும். சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
மருத்துவத்தில் வாழை இலை:
சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை மருந்து போல தடவி கட்டி வைத்தால், ரணங்கள் சீக்கிரம் ஆறும். கிருமிகளின் தாக்கமும் இருக்காது. வாழை மரத்தில் குருத்தை கொஞ்சம் கிளறி விட்டு, அந்த தண்ணீரை எடுத்து அதில் சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரைப் பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.
Read More: “வானில் வெடித்துச் சிதறப்போகும் நட்சத்திரம்” வெறுங் கண்ணால் எப்படிப் பார்க்கலாம்?