சர்வதேச மொபைல் நம்பரிலிருந்து யுபிஐ கட்டணம் செலுத்தலாம்.!! ICICI வங்கி அறிமுகப்படுத்தும் புதிய சேவை.!!
ICICI வங்கி இன்று முதல் தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த வசதியின் மூலம் வெளிநாட்டில் இருக்கும் என்ஆர்ஐ வாடிக்கையாளர்களும் யுபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் மூலம் தங்களது சர்வதேச செல்போன் எங்களை பயன்படுத்தி இந்தியாவில் உடனடியாக கட்டணங்களை செலுத்துவதற்கான வசதியை அறிமுகம் செய்திருக்கிறது.
இந்த வசதியின் மூலம், வங்கியின் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள், இந்தியாவில் உள்ள ஐசிஐசிஐ வங்கியில் உள்ள என்ஆர்இ/என்ஆர்ஓ வங்கிக் கணக்கில் பதிவு செய்யப்பட்ட சர்வதேச மொபைல் எண்ணைக் கொண்டு, தங்கள் பயன்பாட்டு பில்கள், வணிகம் மற்றும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு பணம் செலுத்தலாம்.
ICICI வங்கி தனது மொபைல் பேங்கிங் செயலியான iMobile Pay மூலம் இந்த சேவையை வழங்கியுள்ளது. இதற்கு முன்பு என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் யுபிஐ பணம் செலுத்த இந்திய மொபைல் நம்பர்களை தங்களது வங்கிக் கணக்கில் பதிவு செய்ய வேண்டி இருந்தது. இப்போது வெளிநாட்டு மொபைல் நம்பர்கள் மூலம் யுபிஐ கட்டணம் செலுத்துவதற்கான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வசதியை நாடுகளில் பயன்படுத்துவதற்காக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா வகுத்துள்ள உட்கட்டமைப்பை ஐசிஐசிஐ வங்கி பயன்படுத்தி இருக்கிறது. அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, ஹாங்காங், ஓமன், கத்தார் மற்றும் சவுதி அரேபியா ஆகிய 10 நாடுகளில் உள்ள தங்களது என்ஆர்ஐ வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்கியிருக்கிறது.
ஐசிஐசிஐ வங்கியின் என்ஆர்ஐ வாடிக்கையாளர்கள் இந்திய QR குறியீட்டை பயன்படுத்தி யுபிஐ ஐடி,அல்லது ஏதேனும் இந்திய மொபைல் எண் அல்லது இந்திய வங்கிக் கணக்கிற்கு யுபிஐ மூலமாக பணம் அனுப்பலாம்.
iMobile ஐப் பயன்படுத்தி சர்வதேச மொபைல் எண்ணில் UPI வசதியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்:
imobilepay அப்ளிகேஷனில் லாகின் செய்து கொள்ளவும்.
யுபிஐ கட்டணங்கள் என்பதை தேர்வு செய்யவும்.
மொபைல் நம்பரை சரி பார்க்கவும்.
மேனேஜ் மை ப்ரொபைல் ஆப்ஷனை தேர்வு செய்யவும்.
புதிய யுபிஐ ஐடியை உருவாக்கவும் (பரிந்துரைக்கப்பட்ட விருப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கவும்)
இறுதியாக உங்கள் அக்கவுண்ட் நம்பரை தேர்வு செய்யவும்.