For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Ice Water எச்சரிக்கை!... மாரடைப்பை ஏற்படுத்தும்!… சீன ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

07:30 AM Mar 25, 2024 IST | Kokila
ice water எச்சரிக்கை     மாரடைப்பை ஏற்படுத்தும் … சீன ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Advertisement

Ice Water: ஐஸ் வாட்டர் குடிப்பதால் மாரடைப்பு ஏற்படலாம் என்ற அதிர்ச்சியூட்டும் தகவலை சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ளது.

Advertisement

பொதுவாகவே தண்ணீர் இன்றி உலகில் உயிர்வாழ முடியாது என்பது அனைவரும் அறிந்ததே. மனித உடலிலும் 70 சதவீதம் நீர் நிறைந்துள்ளது. மனிதனின் உடல் இயக்கத்திலும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நீர் இன்றியமையாதது. தண்ணீர் மனிதன் உயிர்வாழ தேவையான அடிப்படை தேவைகளில் ஒன்று. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த உயிர்காக்கும் தண்ணீரை சிலர் கோடைக் காலத்திலும் சரி குளிர்காலத்திலும் சரி குளிர்ந்த நீரைக் குடிப்பார்கள். ஆனால் இதை செய்யக்கூடாது. பொதுவாகவே குளிர்ந்த நீரை பருகுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், குளிர்ந்த நீரை குடிக்கும்போது நரம்புகள் தூண்டப்பட்டு, இதயத் துடிப்பைக் குறைக்கும் அபாயம் ஏற்படும்.

இது தொடர்பாக சீன மருத்துவ அறிவியல் அகாடமி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், கோடைகாலத்தில் பிரிட்ஜில் இருக்கும் நீரை குடிப்பது, உடலில் இருக்கும் கொழுப்புகள் கரையும் நிகழ்வை வெகுவாக தடுக்கும். இதனால் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவதுடன், இரத்த நாளங்களும் சுருங்கிப்போகும். இதனால் செரிமான உறுப்புக்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சும் ஆற்றல் நேரடியாக பாதிக்கப்பட்டு, பின்னாட்களில் இது மாரடைப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் கோடைகாலத்தில் நாம் வீட்டில் முடிந்தளவு பானை வாங்கி வைத்து, அதில் நீர் நிரப்பி குடிக்கலாம். பிட்ஜ்தான் வழி எனில் நேரடியாக குளிர்ந்த நீரை நாளொன்றுக்கு பலமுறை குடிக்கலாம், ஒன்று அல்லது இரண்டு முறை சமஅளவு சாதாரண நீர் கலந்து அதிக குளிர் தெரியாமல் குடிப்பது நல்லது. அதேபோல, அறைவெப்ப நிலையில் உள்ளே நீரே உடலுக்கு எவ்வித பிரச்சனையையும் கொடுக்காது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Readmore:இரட்டை இலையை எதிர்த்து போட்டியா..? கேள்வியை சற்றும் எதிர்பாராத ஓபிஎஸ்..!! சட்டென வந்த வைத்திலிங்கம்..!! பரபர பேட்டி..!!

Tags :
Advertisement