ICC Men's T20 World Cup : தொடரும் அப்செட்ஸ்..! 2 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய பங்களாதேஷ் அணி..! நாகினி கன்டினியூஸ்..!
Sri Lanka vs Bangladesh : 2024 ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஜூன் 2-ஆம் தேதி தொடங்கி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் புதிய அணிகள் பல சாதனைகளை படைத்து வருகிறது. கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை இளம் அணியான அமெரிக்கா சூப்பர் ஓவரில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. இதேபோல் போல் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆதரிச்சியளித்துள்ளது ரஷீத் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி.
இப்படி பல அப்செட்கள் இந்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் அரங்கேறி வருகிறது. அதே போல் ஒரு அப்செட் தான் தற்போது நிகழ்ந்துள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி வெற்றியை ரசித்துள்ளது. டெக்சாஸின் டல்லாஸில் உள்ள கிராண்ட் ப்ரேரி ஸ்டேடியத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் இலங்கை பங்களாதேஷ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக பத்தும் நிசாங்க 47 ரன்கள் எடுத்தார். அதே போல் டி சில்வா 29, அசலாங்கா 19, அங்கேலோ மத்தியூஸ் 16 ரங்கள் எடுத்தனர். இவர்களை தவிர மற்ற வீரக்கல் அனைவரும் ஒற்றை இலக்குடன் ஆட்டமிழந்தனர். இதே போல் பங்களாதேஷ் தரப்பில் பந்துவீசிய ரிஷாத் ஹொசைன் மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் தல 3 விக்கெட்டுகளும், தஸ்கின் அகமது 2 விக்கெட்டுகளும், ட்னஜிம் ஹசன் சாக்கிப் 1 விக்கெட்டுகளை எடுத்தனர்.
125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 17.4 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியுள்ளது. இந்த வெற்றியின் மூலம் உலக கோப்பை போட்டியில் இலங்கை அணியை முதல் முறை வென்று சாதனை படைத்துள்ளது பங்களாதேஷ் அணி. பங்களாதேஷ் அணி சார்பில் லிதன் தாஸ் 30, ஹ்ரிடோய் 40 ரன்கள் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர். மிகவும் பரபரப்பான இந்த போட்டியில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்கள் நிறைய ஒழுக்கங்களைக் கடைப்பிடித்தனர் மற்றும் இலங்கை பேட்டர்களை ஒருபோதும் தடைகளை உடைக்க அனுமதிக்கவில்லை.
Read More: நியூயார்க்கில் மழை!… நாளை இந்தியா- பாக்., போட்டி நடக்குமா?… வானிலை முன்னறிவிப்பு!