முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

அதிரடி.. அனைத்து வகை பள்ளிகளிலும் ICC குழு கட்டாயம் அமைக்க வேண்டும்....!

ICC committee should be made mandatory in all types of schools
06:46 PM Sep 05, 2024 IST | Vignesh
Advertisement

அனைத்து வகை பள்ளிகளிலும் ICC குழு கட்டாயம் அமைக்க வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தஞ்சாவூர் வருவாய் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் இருந்து பாதுகாத்திட Protection of Children from Sexual Offences Act - 2012 மற்றும் பாதுகாக்கும் சட்டம் 2013 சட்டத்தினை மாநில அளவில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயல்படுத்தி வருகிறது.

Advertisement

இச்சட்டத்தின் படி அனைத்து வகை பள்ளிகளிலும் உள்ளக புகார் குழு ( Internal Complaints Committee - ICC ) கட்டாயம் அமைத்திட வேண்டும். தங்கள் பள்ளிகளில் பாலியல் தொடர்பான குற்றங்களை தடுக்கவும் , புகார் தெரிவிக்கவும் , விசாரணை மேற்கொள்ளவும் தங்கள் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் உள்ளக புகார் குழுவானது கீழ்க்கண்ட விவரப்படி , உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அதன் விவரத்தினை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தங்கள் பள்ளிகள் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலத்தில் ஒப்படைக்க வேண்டும். பெறப்பட்ட படிவத்தினை எண்ணிக்கை வாரியாக இவ்வலுவலகத்துக்கு 06.09.2024 அன்று மதியம் 12.00 க்குள் நேரிடையாக ஒப்படைக்குமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

Tags :
ICC committeeschoolsexual abusetn government
Advertisement
Next Article