முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் மன்சூர் அலிகான்னுடன் படம் நடிக்க மாட்டேன்... நடிகை த்ரிஷா எடுத்த அதிரடி முடிவு..!

05:48 AM Nov 19, 2023 IST | 1newsnationuser2
Advertisement

நடிகர் மன்சூர் அலிகான் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கண்டனம் தெரிவித்துள்ளார் ‌

சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்றில் நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் வெளியான லியோ திரைப்படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தனக்கு அமையவில்லை என தெரிவித்துள்ளார். அதோடு இப்போதெல்லாம் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் தனக்கு கிடைப்பதில்லை. மேலும் நடிகை த்ரிஷா குறித்து பாலியல் ரீதியாக மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisement

இதற்கு நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளத்தில்; நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு என தெரிவித்துள்ளார்.

Tags :
Actor Mansoor ali khanActress Trishaleotamil cinemaTrisha
Advertisement
Next Article