’உன்னை நான் காப்பாத்துறேன்’..! டாக்டரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம்..!! அமலாக்கத்துறை அதிகாரி அதிரடி கைது..!!
திண்டுக்கல் மாவட்டத்தில் மருத்துவர் ஒருவரிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாகக் கூறி இன்று அதிகாலை அமலாக்கத்துறையைச் சேர்ந்த அதிகாரி அங்கித் திவாரி என்பவர் ரூ.20 லட்சம் பெற்றுள்ளார். இது குறித்து மருத்துவர் ஏற்கனவே அளித்த புகாரின் பேரில் தகவலறிந்து அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான போலீசார், அங்கித் திவாரியை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர், அவரது காரில் இருந்து 20 லட்சம் ரூபாய் லஞ்ச பணத்தைக் கைப்பற்றி அவரையும் கைது செய்தனர். இதையடுத்து, மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து சுமார் 6 மணி நேரமாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், திண்டுக்கல் மாவட்டத்தில் யார் யாரிடம் மிரட்டி லஞ்சம் பெறப்பட்டது என்பது குறித்தும் அங்கித் திவாரியிடம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.