முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன்'..!! 'அதற்கான அவசியமும் இல்லை'..!! ஓபிஎஸ் தாக்கு..!!

Former Chief Minister O. Panneerselvam said that Edappadi Palaniswami interviewing me as disloyal is like hiding a whole pumpkin in rice.
01:18 PM Jul 08, 2024 IST | Chella
Advertisement

என்னை விசுவாசமற்றவன் என்று எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்திருப்பது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் உள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுகவுக்கும் அம்மா ஜெயலலிதாவுக்கு எவ்வளவு விசுவாசமாக இருந்தேன் என்பதை அவர்களே மக்களுக்கு பறைசாற்றி சொல்லியிருக்கிறார். அதைப்பற்றி பேச பத்துத் தோல்வி பழனிசாமிக்கு தகுதி இல்லை. முதல்வர் பதவியை கொடுத்தவருக்கு துரோகம், பரிந்துரை செய்தவருக்கு துரோகம், 4 ஆண்டு ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தவருக்கு துரோகம், அதிமுக ஆட்சியை காப்பாற்றிக் கொடுத்தவருக்கு துரோகம் என சுயநலத்திற்காக பல துரோகங்களை செய்து கொண்டு வரும் எடப்பாடி பழனிசாமி, என்னுடைய விசுவாசத்தை பற்றிப் பேச அருகதையற்றவர்.

கோயம்புத்தூரில் எனக்கு கூடிய கூட்டத்தை பார்த்து தவழ்ந்து, ஊர்ந்து, காலில் விழுந்து இபிஎஸ் பெற்ற முதல்வர் பதவியை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக வேலுமணியையும் தங்கமணியையும் தூதுவிட்டார். எடப்பாடி பழனிசாமியிடம் நான் எந்த பதவியும் கேட்கவும் இல்லை. கேட்கவும் மாட்டேன். இபிஎஸ் பதவி வெறி பிடித்தவர். இபிஎஸ்சுடன் சேர எனக்கு மனமில்லை என்றாலும் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அதிமுக மக்களுக்காக இயங்கும் என்ற அம்மாவின் வார்த்தைக்காக இணைவதற்கு முடிவெடுத்தேன்.

பிரதமர் மோடி வலியுறுத்தலின் பேரிலேயே துணை முதல்வர் பதவியை ஏற்றேன். எந்தக் காலத்திலும் எடப்பாடி பழனிசாமியிடம் யாசகம் கேட்கமாட்டேன். அதற்கான அவசியமும் இல்லை. அதிமுக ஒன்றுபட வேண்டும் என்று தான் நான் சொல்லி வருகிறேன். கட்சி இணைவதற்கு நான் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயார்.
கட்சி இணைய எடப்பாடி பழனிசாமி எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாரா என்பதுதான் என் கேள்வி” என தெரிவித்துள்ளார்.

Read More : விவசாயிகளுக்கு குட் நியூஸ்..!! இன்று முதல் இலவசமாக மண் எடுக்கலாம்..!! எப்படி விண்ணப்பிப்பது..?

Tags :
அதிமுகஎடப்பாடி பழனிசாமிஎம்ஜிஆர்ஓ.பன்னீர்செல்வம்ஜெயலலிதா
Advertisement
Next Article