For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Seeman: தேர்தலில் மூத்த மகனுக்கு சீட் கொடுப்பேன்!… சீமானின் சர்ச்சை பேச்சு!

06:57 AM Mar 24, 2024 IST | 1newsnationuser3
seeman  தேர்தலில் மூத்த மகனுக்கு சீட் கொடுப்பேன் … சீமானின் சர்ச்சை பேச்சு
Advertisement

Seeman: 2026ல் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தன் மூத்த மகனுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக சீமான் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நாடாளுமன்றத் தேர்தலில், 40 தொகுதிகளுக்குமான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னையில் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது பேசிய அவர், மக்கள் என் சின்னத்தை தேட மாட்டார்கள். என்னைத்தான் தேடுவார்கள். எதுவுமே இல்லை என்ற நிலையை ஒருவன் உணர்ந்ததால் அவன் உயிரையே ஆயுதமாக ஏந்துவான். அதே நிலையில் தான் இந்த சீமானும் நின்று கொண்டிருக்கிறேன். எங்கள் அரசியல் மக்களை வைத்து பிழைக்க அல்ல, மக்களுக்காக உழைக்க.

40 வேட்பாளர்களை நான் களத்தில் நிறுத்துகிறேன் என்ற எண்ணம் கூடாது. 40 புரட்சியாளர்களை உங்களுக்கு முன்பு நிறுத்துகிறேன். இது ஜெயிக்குமா இது வெல்லமா என்ற எண்ணத்தை கைவிடுங்கள். உலகில் உள்ள தமிழர்களாடு இணைந்து, தேர்தலை நாம் சந்திக்கிறோம். தமிழ் தேசிய கோட்டையை கட்டி நிமிர்த்தும் 40 வேட்பாளர்களை நிறுத்துகிறேன்.

மாற்று மாற்று என கூறிவிட்டு அதே கட்சியோடு கூட்டணி வைப்பது மாற்று அல்ல . அது ஏமாற்று. பிரதமர் வேட்பாளர் யார் என கேள்வி கேட்கிறார்கள். சின்னத்தை பார்த்து வாக்கு செலுத்தும் முறையை திருத்துங்கள். நல்ல எண்ணத்தை பார்த்து ஒட்டு போடுங்கள். பிரதமர் வேட்பாளர் நான்‌ தான்.

அரை விழுக்காடு கால் விழுக்காடு உள்ளவர்களுக்கு உடனே சின்னம் கிடைக்கிறது. உரிமையை பற்றி பேசினால் என்னை தேச துரோகி என‌ சொல்கிறார்கள். நாட்டில் நோயாளிகள் அதிகம் இருக்கிறார்கள். நோயாளிகளே இல்லாத சமூகத்தை உருவாக்க வேண்டும். அதற்காகவே இத்தனை டாக்டர் வேட்பாளர்கள். ஒரு கட்சி எல்லா கட்சிக்கும் எப்படி எதிர்கட்சியாக இருக்கிறது. கூட்டத்தில் ஒருவன்‌ உன்னை எதிர்த்தால் நீ வளர்கிறாய்‌ என்று‌ பெயர்‌. கூட்டமே உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து விட்டாய் என்று‌ பெயர்.

வட மாநிலங்களில் இருந்து வந்த கேரளாவில் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி. ஏன் என்றால் வட மாநிலங்களில் அவர் நின்றால் தோற்று போவார். நாதகவை, பாஜகவின் அணி என்று கூறினார்கள். அதற்கு NIA சோதனை நடத்தி இல்லை என்று நிருபித்தார்கள். சின்னத்திற்கு ஒட்டு இல்லை. சீமானுக்கு தான் ஒட்டு. தனியாக நிற்கிறோம் தனித்து நிற்கிறோம். வரும் சட்டமன்ற தேர்தலில் 150 இளைஞர்களை நிறுத்த போகிறேன் என்று கூறினார்.

இது தொடர்பாக வெளியான வீடியோவில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தன் மூத்த மகனுக்கு வாய்ப்பு கொடுப்பேன் என பேசுகிறார். திமுகவின் வாரிசு அரசியல் செய்கிறது என தொடர் விமர்சனம் வைத்து வந்த சீமான் தற்போது நாம் தமிழர் கட்சியில் மனைவி மற்றும் மகனுக்கு முன்னுரிமை கொடுத்து வருவது அக்கட்சியினரிடையே விவாதத்தை கிளப்பியுள்ளது.

முன்னதாக, சீமானின் நாம் தமிழர் கட்சி இதுவரை போட்டியிட்ட கரும்பு விவசாயி சின்னம், கர்நாடகத்தைச் சேர்ந்த வேறொரு கட்சிக்கு வழங்கப்பட்டது. இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி சார்பில் பரிந்துரைக்கப்பட்ட சின்னங்களில் மைக் சின்னம் தற்போது ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore:  இனி ரயில் நிலையங்களிலும் பாரத் அரிசி கிடைக்கும்!.. ரயில்வே வாரியம்!

Tags :
Advertisement