பல்வலி கூட புற்றுநோயின் அறிகுறி தான்.. அலட்சியம் வேண்டாம்..!! - நிபுணர்கள் எச்சரிக்கை
புற்று நோய் உலகையே அச்சுறுத்தி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஆயிரக்கணக்கான மக்கள் புற்றுநோயால் இறக்கின்றனர். உடலில் புற்று நோய் தொடங்கியிருப்பதை சில ஆரம்ப அறிகுறிகளின் அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். ஆனால் பல்வலி புற்றுநோயின் அறிகுறி என்று உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில் ஒரு செய்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பல்வலி புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம் என்று நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஆம் உண்மைதான், ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோயின் முதன்மை அறிகுறியாக பல்வலி கருதப்பட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். சமீபத்தில் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 78 வயதான ஒரு ஆரோக்கியமான மனிதர் பல்வலி மற்றும் இடது கீழ் தாடையில் வலி ஏற்பட்டதால் பல் மருத்துவரை தொடர்பு கொண்டார். மருத்துவர்கள் வலி ஏற்பட்ட பல்லை உடனடியாக அகற்றினர். இருப்பினும், தாடையில் வீக்கம் வர ஆரம்பித்தது.
மீண்டும் மருத்துவரை அணுகினார். CT ஸ்கேன் செய்த பிறகு, தாடையில் காயம் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்தனர். இது மெட்டாஸ்டேடிக் புரோஸ்டேட் புற்றுநோயின் அறிகுறியாகும். ஆண்களுக்கு ஏற்படும் இந்த புற்றுநோய் பிறப்புறுப்பில் ஏற்படுகிறது. புரோஸ்டேட் சுரப்பியில் உருவாகும் புரோஸ்டேட் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவுகிறது. இந்த பரவல் மெட்டாஸ்டேடிக் புரோஸ்டேட் புற்றுநோய் என்று அழைக்கப்படுகிறது. மற்ற புற்று நோய்களைப் போலவே ப்ராஸ்டேட் புற்றுநோயும் தாடை வரை பரவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தாடை எலும்பிற்கு ஏராளமான இரத்த சப்ளை மற்றும் சுறுசுறுப்பான எலும்பு மஜ்ஜை இருப்பது மெட்டாஸ்டேடிக் புற்றுநோய் செல்கள் உருவாகவும் வளரவும் சாதகமான இடமாக அமைகிறது என்று கூறப்படுகிறது.
ஆனால் மெட்டாஸ்டேடிக் புரோஸ்டேட் புற்றுநோய் மிகவும் அரிதானது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். புற்றுநோய் பரவலாகப் பரவி வருவதற்கான அறிகுறியாகவே இதைக் கருத வேண்டும். இந்த அறிகுறிக்குப் பிறகு சிகிச்சையில் எந்த தாமதமும் ஆபத்தானதாக மாறும் என்று கூறப்படுகிறது.
அறிகுறிகள் : தாடையில் தொடர்ந்து வீக்கம், வலி, வெளிப்படையான காரணமின்றி தளர்வான பற்கள் அல்லது பல் பிரித்தெடுத்த பிறகு வீக்கம் ஆகியவை மெட்டாஸ்டேடிக் புற்றுநோயின் முதன்மை அறிகுறிகளாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும், தாடையில் உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு போன்ற அறிகுறிகளை நரம்பியல் பிரச்சனையின் அறிகுறியாகக் கருத வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், புரோஸ்டேட் புற்றுநோயால் ஒவ்வொரு ஆண்டும் 4 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வழக்கமான பரிசோதனைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரித்தல், புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்த்தல் போன்றவை இந்தப் பிரச்சனையைத் தடுக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Read more ; WhatsApp மெசேஜ்களை சிஐஏ உளவு அமைப்பால் பார்க்க முடியும்..!! – மெட்டா CEO அறிக்கையால் பயனர்கள் அதிர்ச்சி