For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’விஜய் சாருக்கு Escort-ஆக இருந்தேன்’..!! ’செக்யூரிட்டியா வேலை பார்த்துருக்கேன்’..!! சீரியல் நடிகர் வெற்றி வசந்த் உடைத்த உண்மை..!!

Vetri Vasanth, who is playing the character of Muthu in Vijay TV's Sirakadika Aasa serial, is currently going viral in an interview where he spoke about his work in Sarkar.
02:20 PM Jul 05, 2024 IST | Chella
’விஜய் சாருக்கு escort ஆக இருந்தேன்’     ’செக்யூரிட்டியா வேலை பார்த்துருக்கேன்’     சீரியல் நடிகர் வெற்றி வசந்த் உடைத்த உண்மை
Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து கேரக்டரில் நடித்து வரும் வெற்றி வசந்த், சர்க்கார் திரைப்படத்தில் செய்த வேலை குறித்து பேசிய பேட்டி தான் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகனாக நடிக்கும் வெற்றி வசந்த் சின்னத்திரை விஜய் சேதுபதி என்று மக்களால் செல்லமாக அழைக்கப்பட்டு வருகிறார். அதிலும் இவருடைய நிஜப்பெயர் வெற்றி வசந்த் என்பதை விடவும் முத்து என்ற பெயரில் தான் இவர் பலருக்கும் பரிச்சயமாக இருக்கிறார். இவரின் எதார்த்தமான நடிப்பு மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்படுகிறது. அதிலும், முத்து கேரக்டர் பலருடைய சாயலாக இருப்பதால் ஆண்கள் கூட இந்த கேரக்டரை விரும்ப தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், இவர் அளித்துள்ள பேட்டி ஒன்று தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது, ”சிறகடிக்க ஆசை சீரியலில் நடிப்பதற்கு முன்பு நான் நிறைய வேலைகள் செய்திருக்கிறேன். அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்திருக்கிறேன். வாய்ஸ் ஓவர் ஆர்ட்டிஸ்ட் ஆகவும், யூடியூப் டைரக்‌ஷன் செட் அசிஸ்டன்ட் ஆகவும் இருந்திருக்கிறேன். அதுபோல சர்க்கார் திரைப்படத்தில் கூட எஸ்கார்ட் டீம்ல ஒரு 15 நாள் ஒர்க் பண்ணி இருக்கிறேன். சிவா அண்ணா படத்துல செக்யூரிட்டியா இருந்திருக்கிறேன்.

இப்படி பல வேலைகளை செய்து இருக்கிறேன். நான் நடிகனாக வேண்டும் என்று முயற்சிகள் செய்து கொண்டிருந்தபோது அண்ணன் ஒருவர் மூலமாகத்தான் சிறகடிக்க ஆசை சீரியல் ஆடிஷனில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதிலும் இந்த சீரியலில் குமரன் இயக்கும் சீரியல் கதாநாயகனாக ஆடிஷன் நடக்கிறது என்றதும் அப்போ நமக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தான் நினைத்தேன். ஆனால், ஆடிஷனில் கலந்து கொண்டதும் நீங்கள் எப்போ இருந்து நடிக்க வறீங்க என்று குமரன் சார் கேட்டதும் எனக்கு அந்த நிமிடம் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இந்த சீரியலில் நடிப்பவர்களும் சரி சீரியல் டீமும் சரி எல்லோருமே ஒரு குடும்பம் போல தான் இருக்கிறார்கள். அதனாலேயே எனக்கு இந்த சீரியலில் நடிக்கிறோம் என்பது தோன்றவில்லை” என்று பேசியிருக்கிறார்.

Read More : அரசு ஊழியர்களின் குடும்பத்திற்கே ஜாக்பாட்..!! நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறப்போகுது..!! தமிழ்நாடு அரசு மாஸ்..!!

Tags :
Advertisement