ரூ.8 கோடி கேட்டு மனைவி டார்ச்சர்..!! 800 கிமீ தொலைவில் கிடந்த கணவரின் உடல்..!! 500 சிசிடிவி கேமரா..!! அதிரவைக்கும் பின்னணி..!!
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உப்பல் என்ற பகுதியைச் சேர்ந்தவர் நிகரிகா. இவரது 2-வது கணவர் ரமேஷ். கர்நாடகா மாநிலம் கொடகு அருகில் உள்ள காபி தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேரமா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்த போது அந்த வழியாக சிவப்பு கலர் மெர்சிடிஸ் பென்ஸ் ஒன்று சென்றுள்ளது. அந்த கார் ரமேஷ் என்பவர் பெயரில் பதிவாகியுள்ளது. அந்த காரை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தியதில் ரமேஷ் மனைவி நிகரிகாவின் மீது சந்தேகம் ஏற்பட்டது.
நிகரிகாவிடம் நடத்திய விசாரணையில், நிகரிகா தனது காதலன் நிகில் என்பவருடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்தது தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், நிகரிகா இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டு தாயாகியுள்ளார். பிறகு தனது கணவனை பிரிந்த பிறகு நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு ஹரியானா சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு அங்குர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், சிறையில் இருந்து வெளியில் வந்தபோது ரமேஷ் என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
ரமேஷிற்கும் இது 2-வது திருமணம். இத்திருமணத்தின் மூலம் நிகரிகாவிற்கு ரமேஷ் ஆடம்பர வாழ்க்கை கொடுத்தார். ஆனால், மேலும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட நிகரிகா தனது கணவரிடம் ரூ.8 கோடி கேட்டுள்ளார். ஆனால், அந்த அளவுக்கு பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதற்கிடையே, நிகரிகாவிற்கு நிகில் என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, தனது காதலனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய நிகரிகா திட்டமிட்டார். காதலன் நிகில் மற்றும் அங்குர் ஆகியோருடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்துவிட்டு அவரது சொத்துகளை பறிமுதல் செய்ய நிகரிகா திட்டமிட்டார். ரமேஷை ஐதராபாத் உப்பலில் மூச்சுத்திணறடித்துக் கொலை செய்துள்ளனர்.
பின்னர் உடலை அங்கிருந்து 800 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச்சென்று அங்குள்ள காபி தோட்டத்தில் எரித்துள்ளனர். பின்னர் அவர்கள் ஐதராபாத் வந்து நிகரிகா தனது கணவனை காணவில்லை என்று கூறி புகாரளித்துள்ளார். இது குறித்து குடகு போலீஸ் அதிகாரி அதிகாரி ராமராஜன் கூறுகையில், “நிகரிகா அனைத்து ஆதாரங்களையும் அழித்துவிட்டார். எனவே இவ்வழக்கில் துப்பு துலக்குவது மிகவும் சவாலாக இருந்தது. உடல் எரிக்கப்பட்டு இருந்த பகுதியில் சிசிடிவியை ஆய்வு செய்தபோது அப்பகுதியில் அதிகாலை 12 மணியில் இருந்து 2 மணிக்குள் அப்பகுதியில் கார் ஒன்று சென்றது தெரிய வந்தது.
தும்குர் வரையிலான 500 கேமராக்களை ஆய்வு செய்தபிறகு தான் இதில் துப்பு துலங்கியது. நிகரிகாதான் இதில் முக்கிய குற்றவாளி. நிகரிகா, நிகில், அங்குர் ஆகியோர் சேர்ந்து இந்த கொலையை செய்துள்ளனர். அவர்கள் கொலை செய்துவிட்டு அங்கிருந்து ரமேஷ் வீட்டிற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு பெங்களூரு சென்றனர். அங்கிருந்து உடலுடன் குடகுவிற்கு சென்று உடலை எரித்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்..!! இந்த லிஸ்டில் உங்கள் பெயர் இல்லையா..? என்ன செய்ய வேண்டும்..?