”என்கூட உல்லாசமா இருக்கணும்”..!! இளம்பெண்ணை மிரட்டிய மாமா..!! ஹோட்டலில் கொளுந்துவிட்டு எரிந்த உடல்..!! பரபரப்பு சம்பவம்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஒரு தனியார் கம்ப்யூட்டர் நிறுவனம் உள்ளது. இங்கு சாப்ட்வேர் இன்ஜினியராக 24 வயது இளம்பெண் ஒருவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர், கடந்த 6 வருடங்களாக தன்னுடைய தாத்தா - பாட்டி வீட்டில் வசித்து வந்துள்ளார். ஓய்வு நேரத்தில் தன்னுடைய மாமா வீட்டிற்கு சென்று நேரத்தை செலவிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 12ஆம் தேதி இந்த இளம்பெண் ஒரு ஹோட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு திடீரென தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்த நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தன் மகளின் உடலை பார்த்து தாய் கதறி அழுத நிலையில், அந்த இளம் பெண்ணின் நண்பர் ஒருவர் அவரிடம் சென்றார்.
அதாவது அந்த இளம் பெண்ணின் மாமா பிரவீன் என்பவர் பென்டிரைவ் மற்றும் செல்போனில் அந்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இதனால், தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும் தன்னிடம் கூறியதாக கூறினார். ஆனால், நான் அவரிடம் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் பெற்றோரிடம் இது பற்றி கூறுங்கள் என்று கூறிய போதிலும் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டார் என்று நண்பர் கூற, இதைக் கேட்டு தாய் அதிர்ச்சி அடைந்தார்.
இதையடுத்து, இளம்பெண்ணின் தாய், காவல் நிலையத்தில் புகாரளித்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மாமா பிரவீன் அந்த பெண்ணுக்கு தெரியாமல் நிர்வாண புகைப்படங்களை செல்போனில் ரகசியமாக பதிவு செய்துள்ளார். பின்னர், தன்னுடன் உடலுறவு வைக்க வேண்டும் என்று அழைத்துள்ளார். இதனால் அந்த இளம் பெண் அவருடன் பழகியவதை நிறுத்திவிட்டு வேறொரு வாலிபருடன் பழகியுள்ளார்.
இது பிரவீனுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், நிர்வாண போட்டோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். சம்பவத்தன்று, ஒரு ஹோட்டலுக்கு வருமாறு இளம்பெண்ணை அழைத்துள்ளார். அங்கு அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நிலையில், அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் செல்போன் மற்றும் பென்டிரைவ் போன்றவற்றை பறிமுதல் செய்து, இளம்பெண்ணின் தற்கொலைக்கு காரணமான பிரவீனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Read More : Gold Rate | தங்கம் விலை குறைவு..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..? இல்லத்தரசிகள் ஹேப்பி..!!