மக்களே உஷார்..!! பணம் அனுப்பும்போது இப்படியும் ஏமாற்றுவார்கள்..!! எச்சரிக்கும் காவல்துறை..!!
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சீவலப்பேரி ரோட்டில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு டேனியல் சுந்தர் என்ற 35 வயது நபர் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இந்த நிறுவனத்திற்கு, சுண்டக்குறிச்சி மேல தெருவை சேர்ந்த முருகன் என்பவர் போன் செய்துள்ளார். தன்னுடைய வீட்டு கட்டுமானத்திற்காக சிமெண்ட் மற்றும் கம்பிகளை கொண்டுவந்து இறக்குமாறு கூறியிருக்கிறார்.
உடனே டேனியல் சுந்தர், முருகனுடைய வீட்டில் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளை இறக்கி விட்டு அதற்கான பணத்தை கேட்டுள்ளார். அப்போது முருகன் உங்கள் நிறுவனத்திற்கு ஏற்கனவே பணத்தை கூகுள் பே மூலம் அனுப்பிவிட்டதாக கூறியுள்ளார். இதுகுறித்து டேனியல் சுந்தர், நிறுவனத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டபோது பணம் எதுவும் நிறுவனத்திற்கு வரவில்லை என்று கூறியிருக்கின்றனர். இதையடுத்து டேனியல் சுந்தர், தேவர்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசாரும் விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சென்னை, கொராட்டூரை சேர்ந்த விக்னேஷ் (30), திருவள்ளுவர் மாவட்டத்தை சேர்ந்த பைசூர் ரகுமான் (34) ஆகிய இருவரும் டேனியல் சுந்தரிடம், முருகன் போலவே பேசி, கட்டுமான பொருட்களை வாங்கியதும், முருகனிடம் டேனியல் சுந்தர் பேசுவதாக கூறி பொருட்களுக்குரிய பணத்தை கூகுள்-பே மூலம் பெற்றுக் கொண்டதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விக்னேஷ், பைசூர் ரகுமான் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கூகுள் பே மூலம் புதுபுது வகையில் மோசடிகள் நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Read More : நீங்கள் வேலைக்கு செல்லும்போது இந்த விஷயத்தை மறந்துறாதீங்க..!! ஏராளமான நன்மைகள் இருக்கு..!!