For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”இதை நான் அப்போவே சொன்னேன்”..!! ”அவங்க மதிக்கல”..!! I.N.D.I.A கூட்டணியில் இருந்து வெளியேறியது இதற்கு தான்..!!

10:50 AM Feb 01, 2024 IST | 1newsnationuser6
”இதை நான் அப்போவே சொன்னேன்”     ”அவங்க மதிக்கல”     i n d i a கூட்டணியில் இருந்து வெளியேறியது இதற்கு தான்
Advertisement

மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட பீகார் முதல்வரும் ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் முயற்சி மேற்கொண்டார். அக்கூட்டணிக்கு 'இண்டியா' (I.N.D.I.A) என பெயர் சூட்டப்பட்டது. இந்நிலையில், அந்த கூட்டணியில் இருந்து வெளியேறிய நிதிஷ் குமார், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதே நாளில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்து பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Advertisement

இதுதொடர்பாக நிதிஷ் குமார் பேசுகையில், ”எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு 'இண்டியா' என்ற பெயர் வேண்டாம் வேறு பெயர் வைக்கலாம் என்று நான் வலியுறுத்தினேன். ஆனால், என்னுடைய கருத்தை காங்கிரஸும் பிற கட்சிகளும் ஏற்கவில்லை. அவர்கள் ஏற்கனவே முடிவு செய்தபடி இண்டியா என்ற பெயரை அறிவித்தனர். அத்துடன் கூட்டணியின் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இன்று வரை எந்தக் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்று முடிவு எடுக்கப்படவில்லை. இதனால்தான் அக்கூட்டணியில் இருந்து விலகி, நான் ஏற்கனவே இருந்த கூட்டணியில் இணைந்தேன். பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என சட்டப்பேரவையிலும், பொதுக்கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதன்படி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு ராகுல் காந்தி உரிமை கோர முயற்சிக்கிறார்” என்று குற்றம்சாட்டினார்.

Tags :
Advertisement