For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தொகுதி பங்கீடு குறித்து I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை...! மம்தா பானர்ஜி புறக்கணிப்பு..!

06:40 AM Jan 13, 2024 IST | 1newsnationuser2
தொகுதி பங்கீடு குறித்து i n d i a கூட்டணி தலைவர்கள்  இன்று அவசர ஆலோசனை      மம்தா பானர்ஜி புறக்கணிப்பு
Advertisement

தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று அவசர ஆலோசனை கூட்டத்தை மம்தா பானர்ஜி புறக்கணிக்க போவதாக அறிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி கூட்டணியான ‘இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி’ (இந்தியா) கட்சிகளின் முக்கிய தலைவர்கள் ஆன்லைன் வழியாக ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளனர். இக்கூட்டத்தில் கூட்டணியை வலுப்படுத்துவது, தொகுதி பங்கீடு குறித்து வியூகம் வகுப்பது, கூட்டணி ஒருங்கிணைப்பாளர் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

Advertisement

தொகுதி பங்கீடு குறித்து விவாதிக்கப்படும்காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் தொகுதி பங்கீடு, "பாரத் ஜோடோ நியாய யாத்ரா' மற்றும் சில தலைப்புகள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார். ‘பாரத் ஜோடோ நியாய யாத்ரா ஜனவரி 14-ம் தேதி இம்பாலுக்கு அருகில் உள்ள தௌபாலில் தொடங்கும். யாத்ரா’வில் பங்கேற்பது மற்றும் இதர முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தநிலையில் கூட்டணியில் நிலவும் ஒருசில கருத்து வேறுபாடுகளை களைய காணொலி மூலம் இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement