எனக்கு இந்த பவுலர் தான் பிடிக்கும்!. என்னைவிட அவருக்கு தான் மவுசு அதிகம்!. தல தோனி ஓபன் டாக்!.
Dhoni: தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பிடித்த பவுலர் என்றால், எனக்கு அது இந்திய அணியின் பும்ராதான் தல தோனி கூறியுள்ளார்.
இந்தியாவின் T20 உலகக் கோப்பை 2024 வெற்றியில் பும்ரா ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார், ஏனெனில் அவர் போட்டியின் வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று வடிவங்களிலும் பும்ராவின் தாக்கத்தால் ஈர்க்கப்பட்டு, தோனி அவரை தனக்குப் பிடித்த பந்துவீச்சாளராகத் தேர்ந்தெடுத்தார்.
நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தோனியிடம், “தற்போதைய பந்துவீச்சாளர்களில் யாரை மிகவும் பிடிக்கும்” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த தோனி, “தற்போதைய காலகட்டத்தில் மிகவும் பிடித்த பவுலர் என்றால், எனக்கு அது இந்திய அணியின் பும்ராதான். தவிர, என்னைவிட இந்திய கிரிக்கெட் அணியில் பும்ராவின் பங்களிப்பு அதிகம்” என அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பும்ரா பங்கேற்றார். அப்போது, தோனி, கோலி, ரோகித் ஆகிய மூவரில் பிடித்த கேப்டன் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு, ”என்னுடைய பார்வையில் எனக்கு பிடித்த கேப்டன் யாரென்றால், அது நான் தான். ஏனென்றால், நானும் சில போட்டிகளில் கேப்டனாக விளையாடி இருக்கிறேன். என்னைவிட சிறந்த கேப்டன்கள் இருந்தாலும், எனக்கு நான் தான் ஃபேவரைட்” என்று தெரிவித்தார்.
மேலும், தோனியின் தலைமையின் கீழ் விளையாடியபோது பாதுகாப்பாக உணர்ந்ததாகவும், விராட் தலைமையின் கீழ் விளையாடியபோது ஃபிட்னஸ் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டதாகவும் தெரிவித்தார். அதேபோல, ”ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் கொஞ்சம் வித்தியாசமானது. ஏனென்றால், இளம் வீரர்கள் மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்து, அதற்கேற்ப செயல்படுவார். அதேபோல், தவறுகளில் இருந்துதான் அதிகம் கற்றுக் கொள்வார்.
அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் கருத்தையும் கேட்டுக் கொண்டு செயல்படுவார். அவருக்கு கீழ் நீண்டகாலம் விளையாடியது எனக்கு பெருமையான விஷயம். என்னைப் பொருத்தவரை 3 கேப்டன்களும் இந்திய அணியை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் சென்றவர்கள்” என்று பும்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Readmore: நாடுமுழுவதும் அதிர்ச்சி!. ஹேக் செய்யப்பட்ட வங்கி கணினிகள்!. பரிவர்த்தனைகள் தற்காலிக நிறுத்தம்!