ELECTION 2024 | "ராயபுரம் 'கிங்' நான்; என்ன தோற்க வெச்சது பாஜக"… மாஜி அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு.!
ELECTION: 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்னும் 5 நாட்களில் தொடங்க இருக்கிறது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் வருகின்ற 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.
தங்களது கட்சி வேட்பாளர்களையும் கூட்டணி நிகழ்ச்சி வேட்பாளர்களையும் ஆதரித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜகவை சேர்ந்த தேசிய தலைவர்கள் தமிழக சுற்றுப்பயணம் செய்து தங்களது கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் வருகையால் தமிழகத்தின் அரசியல் களம் கலை கட்டியிருக்கிறது.
2019 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பாஜக உடன் கூட்டணியில் இருந்த அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டதாக அறிவித்தது. இந்தத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இரண்டு கட்சியைச் சார்ந்த தலைவர்களும் ஒருவரை ஒருவர் குறை கூறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்விக்கு காரணம் பாஜக தான் என குற்றம் சாட்டியிருக்கிறார், முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார்.
இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் சென்னை ராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 2001 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை 4 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றேன். ஆனால் கடந்த 2021 ஆம் வருட சட்டமன்றத் தேர்தலின் போது திமுக வேட்பாளர் மூர்த்தி என்பவரிடம் தோல்வி அடைந்தேன். எனது தோல்விக்கு காரணம் பாஜக தான். ராயபுரம் தொகுதியில் முடிசூடா மன்னனாக விளங்கிய என்னை தோல்வியடையச் செய்தது பாஜக. இது போன்ற தோல்விகளால் தான் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியதாக ஜெயக்குமார் தெரிவித்து இருக்கிறார்.