For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது'..!! 'அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன்'..!! ரோஜா விளக்கம்..!!

I have respect for sanitation workers. 'How can I tell them not to touch them,' explained Roja.
01:23 PM Jul 18, 2024 IST | Chella
 அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது       அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன்      ரோஜா விளக்கம்
Advertisement

முருகனின் அறுபடை வீடுகளில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், 2ஆம் படை வீடாகும். இந்த கோவில் உலகப்புகழ் பெற்ற முருகன் கோயில்களில் ஒன்று. இந்நிலையில், இங்கு ஆண்டுதோறும் ஆனி வருசாபிஷேக விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில், ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அப்போது ஏராளமானோர் ரோஜா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோருடன் செல்பி எடுக்க முயன்றனர். அவர்கள் அனைவருடனுமே நடிகை ரோஜா செல்பி எடுத்துக் கொண்டார்.

Advertisement

தொடர்ந்து, தூய்மை பணியாளர்கள் சிலர் செல்ஃபி எடுக்க விரும்பினார்கள். ஆர்வமுடன் அவர்கள் ரோஜாவின் மிக அருகில் வந்து நெருங்கி நிற்க முயன்றனர். அப்போது ரோஜா திடீரென கொஞ்சம் தள்ளி நிற்குமாறு கைகாட்டினாராம். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அதில் நடிகை ரோஜா, தனது அருகில் நின்று செல்பி எடுக்க வந்த தூய்மை பணியாளர்களை தள்ளி நிற்க சொன்னதாக கேப்சன்களும் இடம் பெற்றுள்ளன. இதனை பார்த்த நெட்டிசன்கள், தூய்மை பணியாளர்கள் என்ன தீண்டத்தகாதவர்களா? ஏன் இப்படி செய்கிறார் ரோஜா? என்று ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், இது தொடர்பாக பேசிய நடிகை ரோஜா கோவில் தரைதளம் தாழ்வாக இருந்ததால் அவர்கள் ஓடி வந்தால் விழுந்து விடப்போகிறார்கள் என்று கருதி மெதுவா வாங்க என்று மட்டும்தான் கைகாட்டி பேசினேன். அவர்களை நான் தொடக்கூடாது தள்ளி நில்லுங்கள் என்று சொன்னதாக தவறாக சித்தரித்துள்ளனர். துப்புரவு தொழிலாளர்கள் செய்யும் பணி உயர்வானது. அவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது. அவர்களை தொட வேண்டாம் என்று எப்படி சொல்வேன்" என விளக்கம் அளித்துள்ளார்.

Read More : இந்த மாதிரி உடலுறவு வைத்துக் கொண்டால் பெரும் ஆபத்து..!! சுகாதாரத்துறை எச்சரிக்கை..!!

Tags :
Advertisement