For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தேன்.!! நடிகர் சங்கம் ஒன்னுமே செய்யல..!! நடிகை விசித்ரா பகீர் தகவல்..!!

Actress Vichitra has alleged that she reported the sexual harassment to the Actors' Association but did not take any action.
11:51 AM Aug 30, 2024 IST | Chella
எனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகாரளித்தேன்    நடிகர் சங்கம் ஒன்னுமே செய்யல     நடிகை விசித்ரா பகீர் தகவல்
Advertisement

தனக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் குறித்து நடிகர் சங்கத்தில் புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நடிகை விசித்ரா குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

இது குறித்துப் பேசியுள்ள அவர், "நானே நடிகர் சங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னதாக பாலியல் புகார் கொடுத்தேன். இந்தப் பிரச்சனை இப்போதுதான் நடப்பதைப் போன்று பேசுகிறார்கள். நடிகர் விஷால் இப்போதுதான் கமிட்டி அமைக்கப் போவதாக கூறியிருக்கிறார். ஆனால், சங்க உறுப்பினர்களான எங்களுக்கு அப்படி எந்த ஒரு அறிக்கையும் வரவில்லை.

பாலியல் பிரச்சனை தொடர்பாகப் புகார் அளித்தால், சங்கத்திற்கு உள்ளாகவே உள்ள நிர்வாகிகள் பேசி முடித்துவிடுகின்றனர். அது பற்றி செய்திகள் வெளியே தெரிவதில்லை. நான் புகார் கொடுத்த போது ஸ்டெண்ட் மாஸ்டர் யூனியன் கவனத்திற்கு எடுத்துச் சென்றார்கள். எனக்குத் தமிழ்த் திரைப்பட உலகில் பாலியல் சீண்டல் நடக்கவில்லை. தெலுங்கில் நடிக்கும்போது தான் அந்த பிரச்சனை வந்தது.

அப்படிப் பார்த்தால் தமிழ் மற்றும் தெலுங்கு இரண்டு சங்கங்களும் சேர்ந்து பேசிதான் தீர்வு காண வேண்டும். எனக்குத் தொல்லை கொடுத்தவர் யார்..? அது எந்தப் படப்பிடிப்பில் நடந்தது..? என்பன போன்ற எல்லா விவரங்களையும் புகாரில் கூறியிருந்தேன். எனது புகார் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சில முயற்சிகளை எடுத்தனர். ஆனால், தெலுங்கு படச் சங்கத்திடம் இருந்து எந்தவித பதிலும் கிடைக்கவில்லை.

நான் எந்த நபர் மீது புகார் கொடுத்தேனோ, அவரை அழைத்து விசாரிக்கவே இல்லை. புகார் தொடர்பாக தமிழ்நாடு ஸ்டெண்ட் யூனியனும். தெலுங்கு யூனியனும் பேசியதுடன் பிரச்சனை அப்படியே கிடப்பில் போடப்பட்டது. உரிய நபர் ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. அதை நான் கேட்டபோது, 'விவகாரத்தை இதற்கு மேல் பெரிதுபடுத்தாமல் விட்டுவிடுங்கள்' என்று எனக்கு அறிவுறுத்தினார்கள்.

அப்போது சரத்குமார் சங்க நிர்வாகத்தில் இருந்தார். அவர், 'சட்டரீதியாக இதை நீ அணுகி இருக்க வேண்டும். நடிகர் சங்கத்திற்கு வந்திருக்கக் கூடாது' என்றார். பின்னர் நடிகர் சங்கத்தால் பிரச்சனைக்கு ஒரு தீர்வையும் ஏற்படுத்தித் தர முடியாது என்றுதான் சட்டரீதியாக நான் பின்னால் நடவடிக்கை எடுத்தேன்" என்று கூறியிருக்கிறார்.

Read More : ரூ.1,000 மகளிர் உரிமைத்தொகை..!! சூப்பர் அறிவிப்பை வெளியிடும் தமிழ்நாடு அரசு..!!

Tags :
Advertisement