முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Yuvraj Singh: தேர்தலில் போட்டியிடும் எண்ணம் எனக்கில்லை!… சமூக பணியாற்றவே ஆர்வம்!… ரசிகர்கள் வரவேற்பு!

06:14 AM Mar 02, 2024 IST | 1newsnationuser3
Advertisement

Yuvraj Singh: நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அந்தவகையில் அமிர்தசரஸ் மக்களவை தொகுதியில் சித்துவும், பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் தொகுதியில் யுவராஜ் சிங்கும் போட்டியிடவுள்ளதாக கூறப்பட்டது. இந்தநிலையில் ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது என்று யுவராஜ் சிங் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‛ஊடகங்களில் தவறான செய்திகள் வருகிறது. நான் குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை. எனது ஆர்வம் என்பது வேறு விதமாக உள்ளது. பல்வேறு திறமைகளை கொண்டவர்களுக்கு ஆதரவு வழங்குவதிலும், உதவுவதிலும் தான் உள்ளது. எனது YOUWECAN அறக்கட்டளையின் மூலம் அதனை தொடர்ந்து செய்வேன்'' என தெரிவித்துள்ளார்.

Tags :
குர்தாஸ்பூர் தொகுதியில் போட்டியிடவில்லைசமூக பணியாற்றவே ஆர்வம்
Advertisement
Next Article