அமெரிக்க சதியில் நான் தோற்று விட்டேன்!. விரைவில் திரும்பி வருவேன்!. வைரலாகும் ஷேக் ஹசீனாவின் கடிதம்!
Sheikh Hasina: அமெரிக்காவின் விருப்பத்திற்கு நான் இணங்கவில்லை என்பதால் வன்முறை வெடித்ததற்கு காரணம் எனவும், நம்பிக்கையை இழக்கக்கூடாது; நான் விரைவில் திரும்பி வருவேன் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா வீடியோ வைரலாகி வருகிறது.
எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, தேர்தல் முறைகேடு என பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜனவரி மாதம் 4-வது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசீனா. 5 மாதங்கள் கடந்த பின்னர், குடிமைப் பணிகளில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்க டாக்கா நீதிமன்றம் அனுமதி அளித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 6 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைதி போராட்டத்தை அறிவித்தனர். மாணவர் போராட்டத்திற்கு ஷேக் ஹசீனா அனுமதி வழங்காத நிலையிலும், நாடு முழுவதும் போராட்டம் வேகமெடுத்தது. போராட்டத்தை ஒடுக்க நினைத்த காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது. வன்முறை நிகழ்ந்தது. நாடு முழுவதும் வன்முறையும் கலவரமும் தீவிரமடைய, டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது காவல்துறை. இதில் ஏராளமானவர்கள் பலியாகினர்.
இதையடுத்து, பிரதமர் அலுவலகத்திற்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டதால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு பிரதமர் ஷேக் ஹசினா, இந்தியாவிற்கு தப்பி வந்தார். இதையடுத்து, வங்கதேசத்தில் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ளது. இந்நிலையில், நாட்டு மக்களிடம் உரையாற்ற இருந்த குறிப்பு தொடர்பாக, தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஷேக் ஹசீனா எழுதிய கடிதம் தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
வன்முறையில் இறப்பவர்களின் உடல்களை பார்க்கும் சக்தி எனக்கு இல்லை. இதற்காகவே பிரதமர் பதவியை ராஜினாமா செய்தேன். மாணவர்களின் சடலங்களை வைத்து ஆட்சிக்கு வர எதிரிகள் விரும்பினர். அதை நான் அனுமதிக்கவில்லை. வங்கதேசத்துக்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவின் இறையாண்மையை ஒப்படைத்து விட்டு, வங்க கடல் பகுதியில் அமெரிக்காவை ஆட்சி செய்ய அனுமதித்திருந்தால், நான் தொடர்ந்து ஆட்சியில் இருந்திருக்க முடியும்.
ஆனால், அதை நான் செய்யவில்லை. பிரிவினைவாதிகளின் சூழ்ச்சிக்கு ஆளாக வேண்டாம். செயின்ட் மார்ட்டின் தீவில் விமான தளம் அமைக்க அமெரிக்கா விரும்பியது. அதற்கு நாம் இணங்கவில்லை. நீங்கள் என்னை தேர்ந்தெடுத்ததால், நான் உங்கள் தலைவரானேன். வங்கதேச மக்களே என் பலம். அவர்களே என்னை விரும்பவில்லை; அதனால் வெளியேறினேன். அவாமி லீக் கட்சி எப்போதும் மீண்டு வந்துள்ளது. நம்பிக்கையை இழக்கக்கூடாது; நான் விரைவில் திரும்பி வருவேன். நான் தோற்று விட்டேன்; ஆனால், வங்கதேச மக்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
Readmore: WOW!. அடுத்த மாதம் உலக மகளிர் கபடி தொடர்!. முதல்முறையாக இந்தியாவில் நடக்கிறது!.