”எல்லாம் கொடுத்துட்டேன்.. இனி நீ பாத்துக்க”..!! ஓனருக்காக 1,000 வேலைக்கு விண்ணப்பித்த AI..!! மறுநாளே நடந்த மாஸ் சம்பவம்..!!
தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் AI என்பது தவிர்க்கவே முடியாத ஒன்றாகிவிட்டது. அப்படி தான் இங்கே இளைஞர் ஒருவர் ஏஐ தொழில்நுட்பத்தை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளார். இவர், ஏஐ தொழில்நுட்பம் மூலம் வேலை தேடி வந்துள்ளார். அதாவது, தனது அடிப்படைத் தகவல்கள், படிப்புகள் உள்ளிட்ட ரெஸ்யூமிற்கு தேவையான அனைத்து தகவல்களையும் ஏஐ டூலுக்கு கொடுத்துள்ளார். மேலும், வேலைக்கு விண்ணப்பிக்கும்படி ஏஐ போட்டை (AI bot) பிரோகிராம் செய்துள்ளார். பின்னர், அவர் தூங்கச் சென்றுவிட்டார். அவர் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே ஏஐ போட் அவருக்கான வேலையை தேட ஆரம்பித்துவிட்டது.
அதாவது, ஒரே நேரத்தில் சுமார் 1,000 வேலைகளுக்கு விண்ணப்பித்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதன் மூலம் சுமார் 50 வேலைகளின் நேர்காணலுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவல்களை அவர் தனது ரெட்டிட் தளத்தில் பகிர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எதாவது கேள்வி எழுப்பினால்.. அதற்கான பதிலைக் கூட தானாக மின்னஞ்சலில் அனுப்பும்படி அவர் புரோகிராம் செய்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இப்போது ரெஸ்யூம்களை ஃபில்டர் செய்வதில் தானியங்கி முறையைத் தான் நிறுவனங்களே பின்பற்றுகின்றன. அந்த ஆட்டோமெட்டிக் ஸ்கிரீனிங் சிஸ்டம்களை கடந்து செல்ல இம்முறை நம்ப முடியாத அளவிற்குப் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு வேலைக்கு என்ன தேவை என்பதைக் கருத்தில் கொண்டு ரெஸ்யூம்களை ஏஐ சாட் போட்கள் மாற்றியமைப்பதாக கூறும் அவர், இதன் மூலம் நமது ரெஸ்யூம் அதிகம் கவனிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறியுள்ளார்.
ஒரே மாதத்தில் இவருக்கு 50 நேர்காணல் அழைப்பு வந்ததைப் பார்த்து பலரும் வியந்துள்ளனர். இதை நெட்டிசன்கள் பலரும் பாராட்டினாலும் கூட, சிலர் வரும் காலத்தில் எங்கு ஏஐ காரணமாக வேலைவாய்ப்பு பறிக்கப்படுமா? என்ற அச்சத்தில் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.