Election 2024 | "மு.க அழகிரி-க்கு டஃப் கொடுத்தவன் நான்; அண்ணாமலை எல்லாம் ஒரு மேட்டரா.?" செல்லூர் ராஜு மாஸ் பேட்டி.!
Election 2024: திமுக-வின் முன்னாள் அமைச்சர் மு.க அழகிரியை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன். எனக்கு பாஜக தலைவர் அண்ணாமலை எல்லாம் ஒரு மேட்டரே இல்லை என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தலின்(Election) முதல் கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த பொது தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.
கடந்த தேர்தல்களில் பாஜக அதிமுக உடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து அதிமுக பாஜக உடனான கூட்டணியை முடித்துக் கொண்டது. தற்போது அதிமுக மற்றும் பாஜக கட்சிகள் தங்களது தலைமையில் கூட்டணி அமைத்து பாராளுமன்றத் தேர்தலை சந்திக்க உள்ளது .
இந்நிலையில் பாஜக மற்றும் அதிமுக கட்சியின் தலைவர்கள் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்வதும் குற்றச்சாட்டு சுமத்துவதும் தொடர்ந்து வருகிறது. குறிப்பாக பாஜகவின் மாநில தலைவரும் கோவை தொகுதி பாராளுமன்ற வேட்பாளருமான அண்ணாமலைக்கும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விற்கும் இடையேயான வாக்குவாதம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது .
இருவரும் தொடர்ந்து ஒருவர் மீது மற்றொருவர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆதரித்து செல்லூர் ராஜு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பத்திரிக்கையாளர்கள் அண்ணாமலை குறித்த கேள்விகளை செல்லூர் ராஜாவிடம் கேட்டனர்.
இதற்கு பதில் அளித்து பேசிய செல்லூர் ராஜு "அண்ணாமலை எல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லை. மதுரையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த திமுகவின் அழகிரியை எதிர்த்தே அரசியல் செய்தவன். அண்ணாமலை எல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவர்களுக்கெல்லாம் பயப்பட முடியாது" என தெரிவித்திருக்கிறார். அவரது இந்த பேட்டி தற்போது வைரலாகி வருகிறது.