For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'சினிமாவைவிட யூடியூப்பில் அதிகம் சம்பாதிக்கிறேன்’..!! ஒரு வீடியோவுக்கு ரூ.70,000..!! அப்படினா ஒரு மாசத்துக்கு..? பயில்வான் ஓபன் டாக்..!!

08:51 AM May 04, 2024 IST | Chella
 சினிமாவைவிட யூடியூப்பில் அதிகம் சம்பாதிக்கிறேன்’     ஒரு வீடியோவுக்கு ரூ 70 000     அப்படினா ஒரு மாசத்துக்கு    பயில்வான் ஓபன் டாக்
Advertisement

நடிகராகவும், பத்திரிகை விமர்சகராகவும் இருக்கும் பயில்வான் ரங்கநாதன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் "வாழ்ந்து காட்டுவோம்" என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது தனக்கு சினிமாவை விட யூடியூப்பில் தான் அதிக வருமானம் வருகிறது என்றும் ஒரு நாளைக்கு எவ்வளவு வருமானம் வருகிறது என்றும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

Advertisement

சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் பலருக்கும் பயில்வான் ரங்கநாதனை தெரிந்திருக்கும். சினிமா துறையில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றி அவர்களின் அந்தரங்க விஷயங்கள் மற்றும் சர்ச்சையான விஷயங்களை பேசி அதிகமான வியூஸ் வாங்கிக் கொண்டிருக்கிறார். இதனால் இவரை பலர் திட்டிக் கொண்டிருந்தாலும், இவர் பேசுவதை அதிகமானோர் தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். இந்நிலையில், பயில்வான் ரங்கநாதன் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

இவர் பேசிய ப்ரோமோ இணையத்தில் வெளியானதுமே இந்த எபிசோடு காண எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. இப்படியான நிலையில், தற்போது இவர் பேசிய எபிசோடு வெளியாகியுள்ளது. அதில் பயில்வான் ரங்கநாதன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் குயிலியிடம் தான் எப்படி சினிமா நடிகைகள் பற்றி பேச தொடங்கினேன் என்பது பற்றி கூறியிருக்கிறார். அந்த வகையில், நான் சினிமாவில் ஆரம்பத்தில் நடிக்க தொடங்கிய போது எனக்கு பிரபலம் கிடைத்து விட்டது. மலையாளத்தில் கூட நீங்கள் நடிகர் மம்மட்டியுடன் நடித்திருக்கீங்களே என்று என்னை அடையாளப்படுத்தி சிலர் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் நடிகர் எம்ஜிஆரின் தீவிரமான ரசிகர். ஆனாலும் சிவாஜியோடு நடித்திருக்கிறேன். ரஜினி, கமல் போன்ற நடிகர்களோடு நான் நடித்துக் கொண்டிருந்தாலும் நான் பத்திரிகைகளுக்கு செய்தி அனுப்பி கொண்டு தான் இருந்தேன்.

இப்போது சிலர் என்னை யூடியூபில் பேசுவதற்காக கூப்பிடுகிறார்கள். நானும் மறுக்க முடியவில்லை. பத்திரிகையில் எழுதிய செய்தியை தான் இப்போது யூடியூபில் பேசிக் கொண்டிருக்கிறேன். அதே நேரத்தில் ஒரு சில செய்திகள் புதியதாகவும் பேசுகிறேன். ஆனால், நான் பேசும் செய்திகள் பொய்யானது அல்ல. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் பேச மாட்டேன். அதுபோல எனக்குன்னு யூடியூப் சேனல் எதுவும் கிடையாது. என்னை சில யூடியூப் காரங்க அவங்க சேனலில் பேசுவதற்காக கேக்குறாங்க. அது போல நானும் செய்கிறேன்.

அதுபோல ஒரு சில செய்தி ட்ரெண்ட் ஆனதும் ஒரே நேரத்தில் இரண்டு, மூணு யூடியூப்-இல் இருந்து என்னிடம் பேச சொல்லுறாங்க. அதில் ஒரு சேனலில் பேசியதை இன்னொரு சேனலில் பேசமாட்டேன். ஒரு சேனலில் பாசிட்டிவாக பேசினால் இன்னொரு சேனலில் நெகட்டிவாக பேசுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்த பயில்வானிடம் குயிலி நீங்க சினிமாவில் நடித்து அதிக சம்பளம் வாங்குறீங்களா? இல்ல உங்களுக்கு யூடியூப் மூலமா சம்பளம் வருதா? என்று கேட்க, அதற்கு பயில்வான், எனக்கு யூடியூப்பில் தான் அதிக சம்பளம் வருது. ஒரு வீடியோ பேசினால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் முதல் சம்பளம் கிடைக்கும் என்று பேசியிருக்கிறார்.

Read More : பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் அதிரடி கைது..!! என்ன வழக்கு தெரியுமா..? ஜாமீன் கிடைக்காதாமே..!!

Advertisement