"உன்னோட Sorry எனக்கு வேண்டாம்"..!! பிக்பாஸ் வீட்டிற்குள் நிக்சனை வெச்சி செய்யும் வினுஷா..!!
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான 2-வது ப்ரோமோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் 7 சீசனில் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் தற்போது மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள நிலையில், நிக்சன் மற்றும் விஜய் வருகை தந்துள்ளனர். அவர்களை போட்டியாளர்கள் ஆரவாரமாக வரவேற்றுள்ளனர். இந்நிலையில், நிக்சன் மற்றும் வினுஷா இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்று கொண்டிருக்கிறது.
அதில் நிக்சன் "ஐஷுவிடம் அந்த விஷயம் குறித்து பேசும் போது எனக்கு தப்பு என்று தோணவில்லை. அதை வைத்து உள்ளே ஒன்று பேசினார்கள். வெளியே வச்சி செஞ்சிட்டாங்க, எனக்கு உங்க கிட்ட சாரி கேக்கணும் என்று மட்டும் தான் தோணிச்சி சாரி" என்று கூறுகிறார். அதற்கு வினுஷா "நீ பேசுனது தப்புனு உனக்கே தெரிஞ்சிருச்சி, உனக்கே தெரியுது நீ பேசுனது தப்புன்னு, நீ சரியா புரிஞ்சிக்கல, அப்டி பேசுனதுனால நான் ஹர்ட் ஆகி இருக்கேன் அப்டினு நீ சாரி கேட்டா அத ஏற்றுகொள்ள முடியாது" என்று கூறுகிறார். அதற்கு நிக்சன் நீங்க மறுபடி மறுபடி சொல்லி காட்டுறீங்க என்று கூறுகிறார். அத்தோடு ப்ரோமோ முடிவடைகிறது.