For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'வெளிய போனா பேச விடுவாங்களான்னு தெரியல’..!! ஐஷூவை நினைத்து கதறி அழுத நிக்சன்..!!

08:35 AM Nov 13, 2023 IST | 1newsnationuser6
 வெளிய போனா பேச விடுவாங்களான்னு தெரியல’     ஐஷூவை நினைத்து கதறி அழுத நிக்சன்
Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதிலும் சனி, ஞாயிறு கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும், நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஷு வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் ஐஷு பின்னால் சுற்றிவந்த நிக்சன் அவரது வெளியேற்றத்திற்கு பின்னர் கதறி கதறி அழுதுள்ளார். தற்போது அது குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தனது சக போட்டியாளர்களிடம், 'ஐஷு ஒரு குழந்தை, அவள சும்மா ஏதாவது சொல்லி சொல்லியே வெளிய அனுப்பிட்டாங்க. வெளிய அவளுக்கு என்ன சொல்லுவாங்களோ தெரியல. வீட்டுல எத்தனையோ பேர் சும்மா தான் இருக்காங்க. அவங்கள அனுப்பி இருக்கலாம். ஒரு ஆணும் பொண்ணும் கதைச்சா காதலா? பயந்து பயந்து பேசிட்டு இருந்தேன். வெளிய போனா பேச விடுவாங்களோ மாட்டாங்களா? என கூறுகிறார் நிக்சன்.

Tags :
Advertisement