முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”என்னால முடியல”..!! நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவன் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்..!!

08:59 AM Nov 29, 2023 IST | 1newsnationuser6
Advertisement

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி - ஜே.இ.இ நுழைவு தேர்வு, நீட் தேர்வு போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து மாணவர்கள் இங்கு வந்து தனியார் பயிற்சி மையங்களில் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். இதற்கிடையே, சமீப மாதங்களாக கோட்டா நகரில் பயிற்சி பெற்று வரும் மாணவர்கள், திடீரென தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.

Advertisement

இந்நிலையில், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பவுரீத் உசைன் (வயது 20) என்ற வாலிபர், கோட்டா நகரில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த ஒரு வருடமாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். நேற்று முன்தினம் அவர் தான் தங்கியிருந்த விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை கோட்டா நகரில், பயிற்சி மாணவர்கள் 25 பேர் இப்படி தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :
நீட் தேர்வுமாணவன் தற்கொலைமேற்குவங்க மாநிலம்ராஜஸ்தான் மாநிலம்
Advertisement
Next Article