முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’இதுக்கும் மேல என்னால முடியல’..!! போலீஸ்காரர் கேட்கும் போதெல்லாம் உல்லாசம்..!! திடீரென வந்த 10 பேர்..!! கடைசியில் ட்விஸ்ட்..!!

When Karthik was not at home, Yesudas was having fun having sex with the girl.
07:17 AM Sep 25, 2024 IST | Chella
Advertisement

திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையை அடுத்த பிராயம்பத்தை சேர்ந்தவர் கார்த்திக். 31 வயதாகும் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கார்த்திக் ஏற்கனவே திருமணமான பெண்ணை அழைத்து வந்து செந்தூர்புரத்தில் 3 வருடங்களாக தங்க வைத்து குடும்பம் நடத்தி உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் தான், கார்த்திக்கை வழிப்பறி வழக்கில் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

அவரி மீட்பதற்காக கார்த்தியின் கள்ளக்காதலி வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் தலைமை காவலர் ஏசுதாஸ், அந்தப் பெண்ணிடம் ”உனது கள்ளக்காதலன் சீக்கிரமாக வெளியே வரவேண்டும் என்றால், அவர் மீது மேலும் வழக்குப் போடாமல் இருக்க நீ என்னோட உல்லாசமாக இருக்க வேண்டும்” என்று வற்புறுத்தியுள்ளார்.

இதனால் கார்த்திக் சிறையில் இருக்கும் வேலையில், தலைமை காவலர் ஏசுதாஸ், அந்தப் பெண்ணுடன் பலமுறை உல்லாசம் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 3 மாதங்கள் சிறையில் இருந்த கார்த்திக், பிணையில் வெளியே வந்துள்ளார். அவர் சிறையில் இருந்து வெளியே வந்தும் கூட, கார்த்திக் வீட்டில் இல்லாத சமயத்தில், அந்தப் பெண்ணுடன் உடலுறவு வைத்துக் கொண்டு ஜாலியாக இருந்துள்ளார் ஏசுதாஸ்.

இந்நிலையில், கடந்த 4ஆம் தேதி இரவு காவலர் ஏசுதாஸ், கார்த்திக் இல்லாத நேரத்தில் மீண்டும் உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். அப்போது, தலைமை காவலருக்கு கள்ளக்காதலிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், கள்ளக்காதலியை ஏசுதாஸ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நடந்தவற்றை கார்த்திக்கிடம் அந்த பெண் செல்போன் மூலமாக பேசி வர வைத்துள்ளார். பின்னர், அவசர அவசரமாக வீட்டிற்கு வந்த கார்த்திக், தலைமை காவலரை சரமாரியாக வெளுத்து வாங்கியுள்ளார்.

இதில், காயமடைந்த ஏசுதாஸ், பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 21ஆம் தேதி திருமழிசையில் உள்ள கார்த்தியின் வீட்டிற்கு அத்துமீறி நுழைந்த காவலர்கள் இயேசுதாஸ், சரத், தாஸ் உள்ளிட்ட சுமார் 10 பேர் கொண்ட போலீசார், கார்த்திக்கை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில், பலத்த காயம் அடைந்த கார்த்திக்கை பூவிருந்தவல்லி கூட்டி வந்து பூந்தமல்லி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான கார்த்திக், நடந்தவற்றை நீதிபதியிடம் கூறினார். இதையடுத்து, அவரை பிணையில் விடுவித்துள்ளார். மேலும், வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஏசுதாஸ் ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், கார்த்திகை கடத்திச் சென்று தாக்கிய தலைமை காவலருக்கு உதவிக்கு வந்த 10 போலீசார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் போலீசார் பாதுகாத்து வைத்திருப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கார்த்திக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Read More : ஆண்களே..!! இந்த உணவை நோட் பண்ணிக்கோங்க..!! எல்லா விஷயத்துக்கும் இது போதும்..!!

Tags :
உல்லாசம்திருவள்ளூர்போலீஸ்காரர்
Advertisement
Next Article