"மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது… முடிந்ததை பார்த்துக் கொள்ளட்டும்." விசிக-வுக்கு குஷ்பூ சவடால் பதில்.!
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பூ. சில காலம் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து பணியாற்றி வந்தார். நிலையில் திடீரென பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து தற்போது மகளிர் அணி பொறுப்பில் பணியாற்றி வருகிறார்.
அவ்வப்போது தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ் மக்களின் கலாச்சாரம் ஆகியவற்றை பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது இவரது வழக்கமாக இருக்கிறது. சமீபத்தில் நடிகர் மன்சூர் அலி கான் த்ரிஷாவை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் குஷ்பூ. அப்போது இவர் சேரிகள் பற்றி பேசியது தற்போது சர்ச்சையாக இருக்கிறது.
சேரி மொழி என்ற வார்த்தையை பயன்படுத்திய இவர் சேரி மொழி என்றால் அன்பான மொழி என்றும் சேரி என்றால் அன்பு என்ற வகையில் பொருள்படும்படி பேசியதாகவும் விளக்கம் அளித்து இருந்தார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். செம்மஞ்சேரி வேளச்சேரி என்று இருப்பது போல் தான் சேரி என பேசினேன். இதற்காக வீசிக கட்சியினர் என் மீது வழக்கு தொடர வேண்டும் என்றால் அந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
என் வாழ்க்கையில் நான் பார்க்காத வழக்குகளா.? அவர்கள் என் வீட்டிற்கு முன்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள் ஆனால் யாரும் வரவில்லை. அவர்கள் வரட்டும் வந்து என்ன செய்யப் போகிறார்கள்.? என்பதை பார்க்க காத்திருக்கிறேன். என வாய்ச்சவடால் விடும் வகையில் இவர் பேசி இருப்பது அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவரது பேச்சுக்கு பலரும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.