"நான் தான் ராஜ்கிரண்-க்கு வாய்ப்பு கொடுத்தேன்..!! ஆனா அவரு..." - ராமராஜன் ஓபன் டாக்..
80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் ராமராஜன். இவருக்கு கிராமப்புறங்களில் ரசிகர்கள் பட்டாளமே ஏராளமானோர் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். ஹீரோவாக மட்டுமே தொடர்ந்து நடித்து வந்த ராமராஜன் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து காணாமல் போனார். தற்போது சாமானியன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் ஹீரோவாகவே ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த படத்தின் புரோமோஷனுக்காக தொடர்ச்சியாக பல youtube சேனல்களில் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார். அதில் ராஜ்கிரணோடு எதனால் கருத்து வேறுபாடு என்பதை பற்றி பேசி இருக்கிறார். அதில் ராமராஜன் பேசுகையில், ராஜ்கிரண் என்னை வைத்து படம் தயாரித்து எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான் தான் அவருக்கு கால் சீட் கொடுத்து படம் தயாரிக்க சொன்னேன். அப்போதுதான் எனக்கு திருமணம் ஆகி இருந்தது. அந்த நேரத்தில் தயாரிப்பாளர் டி.கே போஸ் தயாரிப்பில் "என்னை விட்டுப் போகாதே" என்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருந்தேன்.
டி கே போஸும், ராஜ்கிரணும் நண்பர்கள். இந்த நிலையில் டி.கே போஸ் ஒருமுறை ராஜ்கிரணை என்னுடைய வீட்டிற்கு கூட்டிட்டு வந்திருந்தார். அப்போது அவர் ராஜ்கிரண் சில படங்களுக்காக கடன் வாங்கி கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் நீ ஒரு படம் பண்ணி கொடு என்று என்னிடம் கேட்டுக் கொண்டார். நானும் சரி என்று சொன்னேன். அதற்காக ராஜ்கிரணிடம் அட்வான்ஸ் வாங்கிக்கொண்டு "ராசாவே உன்ன நம்பி" படத்தில் நடித்துக் கொடுத்தேன். அந்த படத்தில் சரிதா எனக்கு அண்ணியாகவும் ,ராதாரவி என்னுடைய அண்ணனாகவும் நடித்திருப்பார். இந்த படத்தில் வரும் சீதைக்கொரு ராவணன் தான் தீக்குளிக்க என்ற பாடலை ராஜ்கிரண் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். நானும் விட்டுவிட்டேன்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து நாங்கள் கிளம்பும்போது என்னிடம் கை கொடுத்த ராஜ்கிரண், சிராஜ் தான் இயக்குனர். அடுத்த படத்தின் பெயர் என்னை பெத்த ராசா என்று சொன்னார். இந்த டைட்டிலை கேட்டவுடன் ஷாக் ஆகி நின்றேன். இசையமைப்பாளர் யார் என்று கேட்டேன். இளையராஜா என்றவுடன் உடனாடியாக ஒப்புக்கொண்டேன். அதன்பிறகு இந்த படத்தின் 2 நாயகிகள் என்று சொன்னார்கள். என்ன என்று விசாரித்தபோது ஒருவரை காதலித்துவிட்டு மற்றொருவரை திருமணம் செய்துகொள்வீர்கள் என்று சொன்னார் இயக்குனர்.
இது நமக்கு செட் ஆனாது கதையை மாற்றுங்கள் என்று சொல்லிவிட்டேன். அதன்பிறகு மாற்றப்பட்டு அந்த படம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து வெளியான இந்த படமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு பெத்தவ மனசு என்று ஒரு படத்தை ராஜ்கிரண் தயாரித்தார். அந்த படத்தில் இயக்குனராக தனது பெயரை போட்டுக்கொள்ள ராஜ்கிரண் விரும்பினார்.
எனக்கு விருப்பம் இல்லை என்றாலும், தயக்கத்துடன் ஒப்புக்கொண்டேன். இந்த படத்தில் துணை இயக்குனராக பணியாற்றிய கே.எஸ்.ரவிக்குமார் வேறு பட வாய்ப்பு கிடைத்து கிளம்பி விட்டார். தவிர்க்க முடியாத காரணங்களால் படமும் பாதியில் நின்றுவிட்டது. அதன்பிறகு எனக்கு சில படங்கள் ட்ராப் ஆனபோது, ராஜ்கிரண் மீண்டும் பெத்தவ மனசு படத்தை கையில் எடுத்து கஸ்தூரி ராஜா இயக்குனர் என்று சொல்லி இளையராஜாவிடம் இசையமைக்க கேட்டுள்ளார்.
அவர் படத்தை எடுத்து வாருங்கள் இசைமைக்கிறேன் என்று சொல்ல, ராஜ்கிரண் இளையராஜாவுக்கு படத்தை போட்டு காட்டினார். படம் அவருக்கு ரொம்ப பிடித்திருந்தது. .ஆனால் அந்த படத்தை ராஜ்கிரண் வெளியிடவில்லை. அதற்கு காரணம் நான் மீண்டும் மேலே வந்துவிடுவேன் என்பதால் வெளியிடாமல் விட்டுவிட்டார். இதுதான் நடந்தது. ராஜ்கிரண் எனக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. நான்தான் அவருக்கு இரண்டு படங்கள் கொடுத்தேன் என் ராமராஜன் தெரிவித்துள்ளார்.
பரபரப்பு..!! சென்னையில் தீவிரவாத கும்பலுக்கு ஆள்சேர்ப்பு! களம் இறங்கிய NIA..!