முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

"நான் சொல்லி அரசியலுக்கு வந்தவர் தம்பி விஜய், ஆனால் ஸ்டைல் வேற" - தமிழக வெற்றிக் கழகம் குறித்து ஆண்டவர் அதிரடி.!

03:05 PM Feb 21, 2024 IST | 1newsnationuser7
Advertisement

தமிழ் சினிமாவில் உலக நாயகன் என அழைக்கப்படும் கமல்ஹாசன் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். கட்சி பற்றிய அறிவிப்பை மதுரையில் வெளியிட்ட அவர் தனது கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ன பெயர் சூட்டினார். தமிழக அரசியலில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக தான் கட்சி தொடங்கியதாக தெரிவித்தார். 2019 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2021 ஆம் வருட சட்டமன்ற தேர்தல்களில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் களம் கண்டது.

Advertisement

இந்நிலையில் தனது கட்சியின் 7 ஆம் ஆண்டு விழாவில் பேசிய அவர் நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் அவ்வளவு சீக்கிரம் அரசியலில் இருந்து போக மாட்டேன் என தெரிவித்திருக்கிறார். மேலும் மத்திய அரசு தென் மாநிலங்களை சிதைத்து வருவதை கடுமையாக குற்றம் சாட்டியிருக்கிறார். வருகின்ற தேர்தலில் இவர் திமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ராகுல் காந்தியின் பாரத் ஜோதா யாத்திரையிலும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் பற்றி பேசிய கமலஹாசன் விஜய் அரசியலுக்கு வருமாறு முதலில் அழைத்தனர் நான் தான் என தெரிவித்திருக்கிறார். மேலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும் என கூறியவர் விஜய் முழு நேர அரசியல்வாதியாக பயணிப்பார் எனவும் தெரிவித்தார். என்னால் முழுநேர அரசியல்வாதியாக இயங்க முடியாது. அது என்னுடைய ஸ்டைல் எனக் கூறியிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக சினிமா படப்பிடிப்புகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி என பிஸியாக இருந்த அவர் பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி அரசியல் களத்தில் குதித்திருக்கிறார். கமல்ஹாசன் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சின்னத்தில் போட்டியிடுவார் என்று பரபரப்பான ஒரு பேச்சும் அடிபட்டு வருகிறது. விரைவிலேயே மக்கள் நீதி மையம் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary: Makkal Neethi Mayyam founder and chief Kamal Hassan said he is the first on who told actor Vijay to enter politics. In his recent presser he revealed this.

Advertisement
Next Article