For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”நம்பிக்கையுடன் இருக்கிறேன்”..!! அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ்குமார்..!!

All the important factors in the examination are in good shape. Going for surgery suddenly can cause tension at home.
01:35 PM Dec 20, 2024 IST | Chella
”நம்பிக்கையுடன் இருக்கிறேன்”     அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற நடிகர் சிவராஜ்குமார்
Advertisement

கன்னட நடிகர் சிவராஜ்குமார் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். டிசம்பர் 24ஆம் தேதி புளோரிடாவில் உள்ள மியாமி புற்றுநோய் கழகத்தில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கவுள்ளது. கன்னட சினிமாவில் நட்சத்திர நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் புனித் ராஜ்குமாரின் சகோதரருமான இவர், கன்னட மக்களிடம் மிகுதியான மதிப்புடன் இருக்கிறார்.

Advertisement

ஜெயிலர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்த இவர், தமிழ் ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்நிலையில், அமெரிக்கா செல்லும் முன் சிவராஜ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், ”இந்தச் செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தாததுக்கு மிக்க நன்றி. நடிகர்கள், ரசிகர்களிடமிருந்து எனக்கு வாழ்த்துகள் வந்ததுக்கு எனக்கு மகிழ்ச்சி.

https://twitter.com/i/status/1869794452812005600

பரிசோதனையில் முக்கியமான காரணிகள் எல்லாம் நல்ல விதமாகவே உள்ளன. திடீரென அறுவைச் சிகிச்சைக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது சிறிது உணர்ச்சிவசப்பட தோன்றுகிறது. அவர்களைப் பார்க்கும்போதுதான் கவலையாக உள்ளது. மற்றபடி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” என்றார்.

Read More : ”காலி குடம் உருண்டால் சப்தம் அதிகமாகத்தான் இருக்கும்”..!! எடப்பாடி பழனிசாமியை கடுமையாக சாடிய முதலமைச்சர் முக.ஸ்டாலின்..!!

Tags :
Advertisement