For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

’நான் மனிதப் பிறவியே இல்லை’..!! ’என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள்தான்’..!! பிரதமர் மோடி தடாலடி பேட்டி..!!

Prime Minister Modi has come under criticism for saying, 'I am not a human being. God has sent me to this world.'
03:03 PM May 22, 2024 IST | Chella
’நான் மனிதப் பிறவியே இல்லை’     ’என்னை இந்த உலகிற்கு அனுப்பியது கடவுள்தான்’     பிரதமர் மோடி தடாலடி பேட்டி
Advertisement

பிரதமர் மோடி, "நான் மனிதப் பிறவியே அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான்" என்று கூறியிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

Advertisement

ஒடிசா மாநில பாஜக தலைவர் சம்பித் பத்ரா, "பூரி ஜெகன்நாதர் கடவுளே எங்கள் மோடியின் பக்தர்தான்" என்று சர்ச்சையை ஏற்படுத்தினார். அவரது பேச்சுக்காக தேசிய ஊடகங்கள் மற்றும் ஒடிசாவின் ஒவ்வொரு குடிமகன் முன்பும் சம்பித் பத்ரா கைகூப்பி மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பூரி ஜெகன்நாதர் பற்றி பேசிய கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பூரி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா, 3 நாட்கள் விரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். மேலும், "மோடி பூரி ஜெகன்நாதரின் பக்தர் என சொல்வதற்கு பதிலாக பூரி ஜெகன்நாதர் மோடியின் பக்தர்" என தவறுதலாக கூறிவிட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

இந்நிலையில், ஒடிசாவில் தனியார் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி பேட்டி அளித்திருக்கிறார். "நான் மனிதப் பிறவி அல்ல. என்னை இந்த உலகிற்கு அனுப்பியது பரமாத்மாதான். பயாலஜிக்கலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை. ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காக, கடவுள் என்னை இந்த பூமிக்கு அனுப்பியிருக்கிறார்.

நான் பெற்றிருக்கும் இந்த ஆற்றல் சாதாரண மனிதரால் பெற்றது கிடையாது. அது கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும். என் தாயார் உயிரோடு இருக்கும் வரை, இந்த உலகிற்கு என் தாய் மூலம்தான் வந்தேன் என நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், என் தாயாரின் மரணத்திற்கு பிறகு, நான் பலவற்றை சிந்தித்துப் பார்த்தேன். இப்போது நான் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். சிலர் இதற்கு எதிராக பேசலாம். ஆனால், நான் இதை முழுமனதாக நம்புகிறேன்” என்றார்.

Read More : ஒரு மணி நேர தூக்கத்தை இழந்தால் உங்களுக்கு இந்த பிரச்சனைகள் வரும்..!! எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

Advertisement