’நான் திராவிட மண்ணில் இருந்து வந்துள்ளேன்’..!! ’8 முறை தமிழ்நாட்டிற்கு வந்தும் உங்களால் வெற்றி பெற முடியவில்லை’..!! ஆ.ராசா விமர்சனம்..!!
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு திமுக எம்.பி. ஆ.ராசா பேசிய கருத்துகள் வைரலாகி வருகிறது.
18-வது மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நாடாளுமன்றம் கடந்த வாரம் முதல்முறையாகக் கூடியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது பேசிய திமுக எம்பி ஆ.ராசா, மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், ”குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு எனது மற்றும் எனது கட்சியான திமுக சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்வது எனது கடமையாகும். இருப்பினும், பேச்சின் உண்மைத்தன்மையையும் உள்ளடக்கத்தையும் பற்றி நான் குறிப்பிட வேண்டும்.
சிறுபான்மையினரையும், இந்துக்கள் அல்லாதோரையும் புறக்கணித்து, பெரும்பான்மை அரசை உருவாக்குவதிலேயே இந்த அரசாங்கம் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, ’370 இடங்களில் வெல்வோம். தேசிய ஜனநாயக கூட்டணியோடு சேர்த்து 400 இடங்களை வெல்வோம்’ என்று கூறினார். ஆனால், இப்போது 240 இடங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. தீவிர பிரசாரம் இருந்தபோதிலும், தமிழகத்தில் உள்ள 40 தொகுதிகள் உட்பட பல இடங்களில் பாஜக தோல்வியடைந்துள்ளது. இது அரசியல் உணர்வின் மாற்றத்தைக் குறிக்கிறது. இந்த மாற்றம் பிராந்திய எல்லைகளுக்கு அப்பால் நீண்டுள்ளது.
அரசியலமைப்பில் உள்ள சட்டத்தின்படி நான் ஒரு இந்து. ஏனென்றால், நான் ஒரு முகமதியன் அல்ல, கிறிஸ்தவனும் அல்ல, பௌத்தரும் அல்ல, பார்சியும் அல்ல. சட்டம் இதை, இந்து என்று கூறுகிறது. இந்துக்களின் ஒருங்கிணைப்பு குறித்து நீங்கள் உண்மையிலேயே கவலைப்படுகிறீர்கள் என்றால், நீங்கள் சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும். பாஜக அரசின் அனைத்துச் செயல்பாடுகளும் சர்வாதிகாரம் கொண்டவை. நான் பெரியார், திராவிட மண்ணிலிருந்து வந்துள்ளேன். 8 முறை தேர்தல் பரப்புரைக்கு பிரதமர் மோடி வந்தும், திராவிட மண்ணில் பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
நீட் தேர்வு மூலம் Majority, Management, Payment என்று மூன்று பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் நீட் தேர்வு முறையை எதிர்க்கிறோம். தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு தீர்மானத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டுள்ளது” என்று குற்றம்ச்சாட்டினார்.
Read More : ’Kalki 2898 AD’ படத்தில் கிருஷ்ணராக நடித்தவர் சூரரைப் போற்று நடிகரா..? அடடே வெளியான சுவாரஸ்ய தகவல்..!!