For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

MI vs SRH | கிளாஸன் வெறித்தனம்.!! 13 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்த ஹைதராபாத் அணி.!!

09:34 PM Mar 27, 2024 IST | Mohisha
mi vs srh   கிளாஸன் வெறித்தனம்    13 வருட ஐபிஎல் சாதனையை முறியடித்த ஹைதராபாத் அணி
Advertisement

2024 ஆம் வருட ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்தப் போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து நடைபெற்றது.

Advertisement

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் துவக்க வீரர் மாயங் அகர்வால் 13 ரன்னில் ஆட்டம் இழந்தாலும் மற்றொரு துவக்க வீரரான ட்ராவஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் அதிரடியாக விளையாடி மிகச் சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர்.

ஹைதராபாத் அணிக்காக அறிமுக வீரராக களம் இறங்கிய ஹெட் 18 பந்துகளில் அரை சதம் எடுத்தார். மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்து சாதனை படைத்தார். ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் முறையே 62 மற்றும் 63 ரன்களில் ஆட்டம் இழந்தாலும் இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த மார்க்ர்ம் மற்றும் கிளாஸன் இருவரும் தங்களது அதிரடியால் ஹைதராபாத் அணியின் ஸ்கோரை 250 க்கு மேல் எடுத்துச் சென்றனர்.

அதிரடியாக விளையாடிய கிளாஸன் 22 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் எடுக்கும் 2-வது சதம் இதுவாகும். இவரின் அதிரடியில் ஹைதராபாத் அணி ஐபிஎல் தொடரில் புதிய சாதனை படைத்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்களை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பதிவு செய்தது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 277 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே இழந்து சாதனை படைத்தது.

2013 ஆம் வருடம் ஆர்சிபி அணி புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது. இன்றைய போட்டியில் சென்றை சரஸ் ஹைதராபாத் அணி அந்த சாதனையை முறியடித்து இருக்கிறது. கிளாஸன் இறுதிவரை அதிரடியாக விளையாடி 34 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகளுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அவருக்கு துணையாக விளையாடிய மார்க்ரம் 28 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சர் உடன் 42 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார்.

Read More: ஒரு ஸ்பூன் அரிசி பயன்படுத்தினால் மலம் இலகுவாக கழியும்… விவரம் உள்ளே…

Advertisement