2-வது மனைவியை முதலாளிக்கு விருந்தாக்கிய கணவன்..!! முதல் மனைவிக்கு ரூ.15 லட்சம் கேட்டு டார்ச்சர்..!! பார்ட்டியில் நடந்த பயங்கரம்..!!
மும்பையைச் சேர்ந்த சோஹைல் ஷேக் என்பவர் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர், சத்திரபதி சாம்ராஜ் நகரைச் சேர்ந்த இளம்பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவியுடனான விவாகரத்து வழக்கு கொண்டிருந்தபோது 2-வது திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாக ஷேக் தனது மனைவியிடம் ரூ.15 லட்சம் பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
முதல் மனைவிக்கு ரூ.15 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும், விவாகரத்திற்காக அந்த பணத்தை கேட்பதாக கூறியிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷேக் அலுவலகத்தில் பார்ட்டி நடப்பதாக கூறி தனது மனைவியை கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஷேக் தனது மனைவியை அலுவலக உரிமையாளருடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளார்.
அதற்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால், அங்கேயே மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். இருப்பினும், அதற்கு சம்மதிக்கவில்லை. இதனால் கோபத்தில் 3 முறை தனது மனைவிக்கு தலாக் சொல்லி விவாகரத்து செய்தார். மேலும், அவரை வீட்டை விட்டு விரட்டி அடித்துள்ளார். இதுகுறித்து ஷேக்கின் 2-வது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : ”இபிஎஸ் இதை செய்தால் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிக் கொள்கிறேன்”..!! டிடிவி தினகரன் பரபரப்பு பேட்டி..!!