முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

7 மாத கர்ப்பிணி மனைவியின் வயிற்றில் ஓங்கி அடித்த கணவன்..!! வெளியே வந்து விழுந்த குழந்தை..!! கேஸ் சிலிண்டரை திறந்துவிட்டு ஓட்டம்..!!

Suspicious, they went to Sachin's house and were shocked to see his wife Sneha lying dead in a pool of blood.
04:22 PM Jan 22, 2025 IST | Chella
Advertisement

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் சச்சின். இவரது மனைவி சினேகா 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். ஆனால், மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட சச்சின், இந்த கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மனைவியை தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார். சினேகா 7 மாதம் கர்ப்பிணியாக இருந்த நிலையில், சச்சின் அவரை வலுக்கட்டாயமாக மது குடிக்க வைத்துள்ளார்.

Advertisement

மேலும், மனைவியின் வயிற்றின் மீது அமர்ந்து தலையணையால் முகத்தை மூடி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். வயிற்றில் ஓங்கி அடித்ததில் மனைவியின் வயிற்றில் இருந்த குழந்தையும் வெளியே வந்து உயிரிழந்தது. இதையடுத்து, கொலை சம்பவத்தை மறைப்பதற்காக சமையலறையில் இருந்து கேஸ் சிலிண்டரை கசிய வைத்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து அவர் தப்பியோடிய நிலையில், அக்கம்பக்கத்தினருக்கு கேஸ் வாசனை வந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அவர்கள், சச்சின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, மனைவி சினேகா ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சினேகா மற்றும் குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், கணவர் சச்சினை வலைவீசி தேடி வருகின்றனர்.

Read More : தோசை மாவில் பூச்சிக்கொல்லி மருந்து..!! தாய், காதலி போட்ட ஸ்கெட்ச்..!! விசாரணையில் வெளிவந்த ஷாக்கிங் தகவல்..!!

Tags :
7 மாத கர்ப்பம்கணவர் ஓட்டம்மனைவி கொலை
Advertisement
Next Article