முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

வெளிநாட்டு கணவர்.! நள்ளிரவில் ஆண் நண்பர்களுடன் கும்மாளம்.! மனைவிக்கு நேர்ந்த கொடூரம்.!

06:10 AM Dec 14, 2023 IST | 1newsnationuser4
Advertisement

கடலூர் அருகே ஆண் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியதால் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் கணவனை கைது செய்திருக்கின்றனர்.

Advertisement

கடலூர் மாவட்டம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல் 42 வயதான இவர் குவைத்தில் வேலை செய்துவிட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஊர் திரும்பி இருக்கிறார். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். கணவர் வெளிநாட்டிலிருந்த போது அவர் சம்பாதித்து அனுப்பிய பணத்தில் மனைவி சரஸ்வதி சுகபோக வாழ்க்கை வாழ்ந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று இரவு பழனிவேல் மற்றும் சரஸ்வதி இருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். திடீரென பழனிவேல் கண் விழித்து பார்த்தபோது மனைவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வெளியே தேடிய போது வீட்டின் மாட்டு கொட்டகையில் தனது ஆண் நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கும்மாளம் அடித்துக் கொண்டிருந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பழனிவேல் மனைவியை தாக்க சென்றுள்ளார். இதனை கண்ட சரஸ்வதியின் ஆண் நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர் .

இதனைத் தொடர்ந்து மனைவியை வீட்டிற்குள் இழுத்துச் சென்று கடுமையாக தாக்கி இருக்கிறார் பழனிவேல். இதில் சம்பவ இடத்திலேயே சரஸ்வதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த கொலை சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சரஸ்வதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக பழனிவேலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
crimecudaloreHomicideHusband ArrestedTamilnadu
Advertisement
Next Article