புளோரிடாவில் கரையை கடந்த மில்டன் புயல்!. 12 பேர் பலி!. மின்வெட்டு, வெள்ளத்தால் மக்கள் கடும் அவதி!
Florida: புளோரிடாவில் மில்டன் புயல் தாக்கியதில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 11 மில்லியன் மக்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க கடல் பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உண்டான ஹெலன் சூறாவளி புயல் பலவீனமடைந்து, கடந்த செப்.26ம் தேதி புளோரிடா பகுதியில் கரையை கடந்தது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை பெய்த நிலையில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த புயல் அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதி மற்றும் புளோரிடா மாகாணம் முழுவதும் பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தியது.
புளோரிடா மாகாணத்தில் மில்டன் புயல் நேற்று கரையை கடந்தது. அதிகபட்சமாக மணிக்கு 195 கிமீ வேகத்தில் காற்று வீசியதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்பின்னர் இந்த சூறாவளி வலுவிழந்தது. இதனால், புளோரிடாவின் அட்லாண்டிக் கடலோரத்தில் செயின்ட் லூசி கவுன்டி பகுதியில் 6 பேர் உட்பட மொத்தம் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சூறாவளி தாக்கியதில் நேற்றிரவு 11 மணியளவில் மின்சாரம் தடைபட்டது. இதனால், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள், இருளில் தவித்தனர். சூறாவளியால் கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட கூடும் என்றும் சுமார் 11 மில்லியன் மக்கள் வெள்ள அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Readmore: ஷாக்!. நீரிழிவு நோயின் தலைநகராக மாறிவரும் இந்தியா!. இந்த உணவுகள்தான் முக்கிய காரணம்!.