இன்றிரவு கரையை கடக்கும் மில்டன் புயல்.. மணிக்கு 260 கிமீ வேகம்..!! தப்பிக்குமா புளோரிடா..
ஹெலீன் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஃபுளோரிடாவை அடுத்ததாக மில்டன் என்ற சக்தி வாய்ந்த புயல் தாக்க உள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்காவை தாக்கிய ஹெலின்ஸ் சூறாவளியால் 232 பேர் உயிரிழந்த நிலையில் அட்லாண்டிக் பெருங்கடலில் மில்டன் என்ற அதிபயங்கர சூறாவளி உருவாகி ஃப்ளோரிடா மாகாணத்தை நெருங்கி வருகிறது.
இந்த புயல் ஆபத்து பிரிவில் 5-ஆம் நிலையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிவேக சூறாவளிக்காற்று வீசுவதுடன், கடும் மழைப்பொழிவும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக, மணிக்கு 270 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று தேசிய வானிலை ஆய்வு மையமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
40 லட்சம் பேர் வசிக்கும் டாம்பாகுடா மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் தான் சூறாவளி கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இப்பகுதிகளில் இருக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர். இரண்டே வார கால இடைவெளியில் 2 புயல்களின் தாக்கத்தை எதிர்கொள்ள இப்பகுதி மக்கள் தயாராகி வருகின்றனர்.
மில்டன் புயலால் ஃபுளோரிடா மாகாணாத்தில் மிகக் கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதையடுத்து, அங்கு வாழ்வா சாவா என்ற நிலைமை உருவாகியுள்ளதாகவும், இதையடுத்து மக்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.
Read more ; மகிழ்ச்சி…! குரூப் 4 பணியிடங்கள் 8,932 ஆக அதிகரிப்பு…!