பங்குச்சந்தை இறக்குவதை முன்கூட்டியே கணித்து கோடிக்கணக்கில் லாபம் பார்க்கும் ஹுண்டன்பர்க்..!! அண்ணாமலை பரபரப்பு பேட்டி..!!
பங்குச் சந்தை இறங்குவதை முன் கூட்டியே கணித்து அந்த செய்தியை வெளியிட்டு ஹுண்டன்பர்க் லாபம் பார்ப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பனைவிதைகள் நடும் நிகழ்ச்சிகளில் பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஹுண்டன்பர்க் நிறுவனம் ஒரு ஷார்ட் செல்லிங் ஏஜென்ட். முதலீட்டாளர்களை பீதியில் ஏற்படுத்தும் வகையில் பங்குச்சந்தை இறங்குவதை முன்கூட்டியே கணித்து செய்திகளை வெளியிட்டு கோடிக்கணக்கில் லாபம் பார்க்கிறது.
ஒரு பங்கு விலை இறங்குவகை முன்கூட்டியே கணித்து அதை விற்று லாபம் பார்க்கிறது. முக்கிய நிறுவனங்களை குறிவைத்து பல கோடி சம்பாதிப்பதே ஹுண்டன்பர்க் போன்ற நிறுவனங்கள் நமக்கு பாடம் எடுக்க வேண்டாம்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “அதானி குழுமம் மீது ஹுண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தது. இந்த விவகாரத்தில் அப்போது செபி பெரிதாக நடவடிக்கை எடுக்கவில்லை.
நீதிமன்றத்திலும் அதானிக்கு எதிராக உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. இந்நிலையில் அதானி குழுமம் முறைகேட்டிற்கு பயன்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) தலைவர் மாதபிக்கு பங்குகள் இருந்ததாக ஹுண்டன்பர்க் நிறுவனம் அதிர்ச்சித் தகவல் அளித்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஹுண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வெளியிட்டுள்ள நிலையில், நாளை அதானி நிறுவனத்தின் பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. ஏற்கெனவே கடந்த ஆண்டும் அவரது நிறுவன பங்குச் சந்தைகளில் சரிவு ஏற்பட்டன” என்றார்.