For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் நபர்களுக்கு "Humsafar" கொள்கை...! அசத்தும் மத்திய அரசு

'Humsafar' policy for persons traveling on National Highways
07:02 AM Oct 09, 2024 IST | Vignesh
தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் நபர்களுக்கு  humsafar  கொள்கை     அசத்தும் மத்திய அரசு
Advertisement

தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களுக்கான வசதிகளை மேம்படுத்தவும், சாலையோரங்களில் பல்வேறு வசதிகளை விரிவுபடுத்துவது தொடர்பாகவும், வடிவமைக்கப்பட்ட 'ஹம்சஃபர் கொள்கையை' மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார்.

Advertisement

தேசிய நெடுஞ்சாலை நிறுவனங்களுடன் இணைந்து பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் பெட்ரோல் பங்க்கில் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய வேண்டும். இந்த கொள்கையின் கீழ் உணவு வளாகம், சிற்றுண்டிச்சாலை, எரிபொருள் நிலையம், மின்சார வாகன சார்ஜிங் நிலையம், பார்க்கிங் வசதிகள், கழிப்பறை வசதி, குழந்தைகள் பராமரிப்பு அறை, ஏடிஎம் மையம், வாகன பழுதுபார்க்கும் மையம், மருந்தக சேவைகள் ஆகியவை தேசிய நெடுஞ்சாலை பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும் என்றார்.

தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிவேக நெடுஞ்சாலைகளிலும் பல்வேறு சேவை வழங்குநர்களை ஒருங்கிணைத்து, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதை இந்த ஹம்சஃபர் கொள்கை நோக்கமாகக் கொண்டுள்ளது. உணவகங்கள், எரிபொருள் நிலையம், அவசர சிகிச்சை மையங்கள் உள்ளிட்டவை தொடர்பான சேவை வழங்குநர்கள் ஹம்சஃபர் கொள்கையின் கீழ் பதிவு செய்ய தகுதியுடையவர்கள் ஆவார்கள். பயணிகளுக்கு உயர்தர வசதிகளை வழங்குவதன் மூலமும், தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்களின் ஒட்டுமொத்த பயண அனுபவத்தை மேம்படுத்துவதன் மூலமும் உலகத் தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதில் 'ஹம்சஃபர் கொள்கை' முக்கியப் பங்காற்றும்.

Tags :
Advertisement