அவமானப்படுத்திய ஆசிரியை!… மகனை கொன்ற டியூசன் மாணவர்!… ஒடிசாவில் கோர சம்பவம்!
ஒடிசா கோர்தா மாவட்டத்தில் உள்ள பெனபஞ்சரி கிராமத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு டியூசன் எடுத்து வருகிறார். இவருக்கு 9ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்தநிலையில், நேற்று மாலை திடீரென டியூசன் பயின்ற மாணவனால், ஆசிரியையின் மகன் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பேசிய புவனேஸ்வர் காவல்துறை துணை ஆணையர் பிரதீக் சிங், கொலை செய்யப்பட்ட ஆசிரியரின் மகன் 9 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் தனது அறையில் இருந்தபோது ஆசிரியை மற்றும் அவரது கணவர் தங்கள் வீட்டில் உள்ள மற்ற அறைகளில் டியூஷன் வகுப்புகளை எடுத்து கொண்டு பிஸியாக இருந்துள்ளனர்.
அப்போது தங்கள் மகனின் திடீர் அலறல் சத்தம் கேட்டு, அவரது அறைக்கு ஆசிரியை மற்றும் அவரது கணவர் வந்த போது மகன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து, அவரை உடனடியாக குர்தா மாவட்ட தலைமையக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த பள்ளி சீருடை மற்றும் பிற பொருட்களை கொண்டு 12ம் வகுப்பு மாணவன் நாங்கள் கண்டுபிடித்தோம். விசாரணையின் போது தனது குற்றத்தை அந்த மாணவர் ஒப்புக்கொண்டார். நாங்கள் பள்ளி பை, உடைகள் மற்றும் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தை கைப்பற்றியுள்ளோம். விசாரணையில், பிளஸ் டூ மாணவர் கொலை செய்யப்பட்ட சிறுவனின் தாயிடம் டியூசன் சென்று படித்து வந்துள்ளார்.
டியூசன் கட்டணம் செலுத்தாததற்காக பொது இடங்களில் வைத்து உயிரிழந்த சிறுவனின் தாய் அதாவது ஆசிரியை அவமானப்படுத்தி உள்ளார். அதனால் கோபத்தில் இருந்த பிளஸ் டூ மாணவர் ஆசிரியரின் மகனை கத்தியால் குத்தியுள்ளார். இருப்பினும், சிறுவனின் தந்தை மனோஜ் பல்தாசிங், நிலுவையில் உள்ள டியூசன் கட்டணத்தை செலுத்துமாறு பிளஸ் டூ மாணவனை ஒருபோதும் கட்டாயப்படுத்தவில்லை என்று கூறினார். மேலும் இந்த சம்பவத்தில் சரியான காரணத்தைக் கண்டறிய சிபிஐ மூலம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.